தென் கொரியாவில் பரவிவரும் காட்டுத்தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published By: Digital Desk 3

26 Mar, 2025 | 10:22 AM
image

தென் கொரியாவின் தென்கிழக்கு பகுதிகளில் பல இடங்களில் பரவிவரும் காட்டுத்தீயினால் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென் கொரியாவின் தென்கிழக்கு பகுதிகளில் செவ்வாய் அன்று பயங்கர காட்டுத் தீ  பரவியது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதோடு, நூற்றுக்கணக்கான கைதிகள்  சிறைச்சாலைகளிலிருந்து இடம் மாற்றப்பட்டடுள்ளனர்.

உய்சோங் கவுண்டியில் ஆரம்பித்த காட்டுத்தீயில் புதன்கிழமை காலை 5 மணி நிலவரப்படி  12 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை சான்சியோங் கவுண்டியில் ஏற்பட்ட மற்றொரு காட்டு தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என தென் கொரிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

காட்டுத் தீயில்  68 சதவீதம் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, உய்சோங்  காட்டுத் தீ பலத்த காற்றினால் அதிகரித்து "கற்பனை செய்ய முடியாத" அளவுக்கு வேகமாக பரவி வருகிறது என தேசிய வன அறிவியல் நிறுவனத்தின் வன அனர்த்த முகாமைத்துவ நிபுணர் லீ பியுங்-டூ தெரிவித்துள்ளார்.

காற்று மற்றும் வரட்சியான வானிலையால் காட்டுத் தீ வேகமாக பரவிவருவதால் தீயை அணைக்க தீயணைப்பு ஹெலிகொப்டர்கள் மற்றும் தரைப்படை வீரர்களை அனுப்புவதாக தற்காலிக ஜனாதிபதி ஹான் டக்-சூ உறுதியளித்துள்ளார்.

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதியில் வரட்சியான வானிலை புதன்கிழமை வரை நீடிக்கும்  என எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதம் லொஸ் ஏஞ்சல்ஸின் ஒரு பகுதியை நாசமாக்கிய காட்டுத்தீ மற்றும் வடகிழக்கு ஜப்பானில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ ஆகியவை ஒப்பீட்டளவில் அரிதானவை என்பதால், காலநிலை மாற்றம் காட்டுத்தீயை அடிக்கடி ஏற்படுத்தும் என்று லீ  தெரிவித்துள்ளார்.

"'பெரிய அளவிலான காட்டுத்தீ அதிகரிக்கும் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எனவே காட்டுத் தீயை அணைக்க அதிக வளங்களையும் மனிதவளத்தையும் தயார்படுத்தப் போகிறோம்,' என லீ தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை உய்சோங்கில் ஏற்பட்ட தீ இன்னும் கட்டுப்படுத்தப்படாத நிலையில்,  பழங்கால கோயில்கள் மற்றும் வீடுகள்  எரிந்து நாசமாகியுள்ளது.

15,000 ஹெக்டயர் நிலம் தீயினால் எரிந்து சேதமடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை விசேட அனர்த்த வலயமாக தென்கொரிய அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் நித்திய இளைப்பாற்றுதல்...

2025-04-21 13:40:29
news-image

சிறுமியைக் கொன்ற சிங்கம்

2025-04-21 13:04:51
news-image

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்...

2025-04-21 12:12:11
news-image

மீண்டும் அதே தவறை செய்தார் அமெரிக்க...

2025-04-21 11:54:12
news-image

சீனா ரஸ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதாக உக்ரைன்...

2025-04-20 13:15:31
news-image

ஈக்குவடோரில் சேவல் பந்தயத்தில் பார்வையாளர்கள் மீது...

2025-04-20 12:46:18
news-image

மன்னர்கள் தேவையில்லை 'அமெரிக்காவில் டிரம்பின் நடவடிக்கைகளிற்கு...

2025-04-20 09:58:13
news-image

அவுஸ்திரேலியாவில் சக்தி வாய்ந்த கடலலைகள் தாக்கி ...

2025-04-20 10:13:22
news-image

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ; வட இந்தியா,...

2025-04-19 14:11:35
news-image

இந்தியாவில் இடிந்து விழுந்த மாடிக் கட்டிடம்...

2025-04-19 11:09:47
news-image

ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா...

2025-04-19 10:01:20
news-image

ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்த...

2025-04-18 16:52:31