தென்பகுதியிலுள்ள அரசியல் தலைவர் கள் யாழ்தேவியில் யாழ்ப்பாணம் சென்று வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனிடம் பாடம் படிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் இதுகுறித்து மேலும் தெரிவித்ததாவது,
வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக தெற்கில் சிங்கள பெரும்பான்மையினத் தலைவர்கள் பெரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். அவரை திட்டித் தீர்த்தனர். அவரை பிரிவினைவாதி என்றும் பயங்கரவாதி என்றும் புலி என்றும் குற்றம்சாட்டினர். ஆனால் வடமாகாண முதலமைச்சர் தற்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கை சகலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கின்றது. வடமாகாண சபையிலுள்ள நான்கு அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. இதனையடுத்து முதலமைச்சர் விக்கினேஸ்வரன் குற்றச்சாட்டுக்களை கண்டு மௌனமாக இருக்கவில்லை. கண்டும் காணாமலும் இருக்கவில்லை. விசாரணைக் குழுவொன்றினை அமைத்து உரிய கால எல்லைக்குள் விசாரணை அறிக்கையை பெற்று தற்போது அதற்கான தீர்ப்பையும் வழங்கியுள்ளார்.
இரண்டு அமைச்சர்களை வீட்டுக்குப் போகுமாறு கூறியுள்ள அவர் மற்றைய இரண்டு அமைச்சர்கள் மீதும் முழுமையான விசாரணை நடைபெறும் என்றும் அதுவரை விடுமுறையில் வீட்டுக்குச் செல்லுமாறும் பணித்துள்ளார். இவ்வாறு செயற்படுவதற்கு அவருக்கு அதிகாரம் இருக்கின்றதா இல்லை யா என்பதை விவாதிப்பதில் பிரயோசனம் இல்லை. அது சட்டப் பிரச்சினைக்கு உட்பட்டதாகும். ஆனாலும் ஜனநாயக ரீதியில் அரசியல் ரீதியாக அவருக்கு அந்த உரிமை இருக்கின்றது. விக்கினேஸ்வரனின் இத்தகைய செயற்படானது ஏனைய மாகாண சபைகளுக்கும் அமைச்சர்களுக்கும் தென்பகுதி அரசியல் தலைவர்களுக்கும் சிறந்த உதாரணமாக திகழ்கின்றது.
இதனால் யாழ்தேவி பிடித்து யாழ்ப்பாணத்திற்குச் சென்று வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனிடம் தென் பகுதி அரசியல் தலைவர்கள் டியூசன் படிக்க வேண்டும். விக்கினேஸ்வரனின் நடவடி க்கை காரணமாகவே மக்கள் அவர் பக்கம் நிற்கின்றனர். மனோ கணேசனான நானும் இதனால்தான் அவர் பக்கம் இருக்கின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM