ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8 வீதத்தில் பேண தீர்மானம் - மத்திய வங்கி

26 Mar, 2025 | 05:39 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஓரிரவு கொள்கை வீதத்தினை 8.00 சதவீதத்தில் தொடர்ச்சியாக பேணுவதற்கு  நாணய சபை தீர்மானித்துள்ளது. மின்சாரத் தீர்வைகள் மற்றும் எரிபொருள் விலைகளில் அவ்வப்போது  மேற்கொள்ளப்பட்ட குறைப்புக்களின் முக்கிய காரணமாக பணவீக்கமானது தற்போது எதிர்மறையாகத் தொடர்ந்தும் காணப்படுகின்றது. பணவீக்கமானது ஆண்டு இறுதியளவில் இலக்கிடப்பட்ட மட்டங்களை அடையுமென நாணய சபை எதிர்பார்க்கப்படுகிறது.

நாணயக் கொள்கை சபையானது நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை  நடைபெற்ற  கூட்டத்தில் ஓரிரவு கொள்கை, பணவீக்கம், உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராய்ந்து அடுத்தக்கட்ட நகர்வுகளை முன்னெடுத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் உலகளாவிய அபிவிருத்திகளைக் கவனமாகக் கருத்திற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. நிலவுகின்ற நாணயக் கொள்கை நிலைமையானது, பணவீக்கம் 5 சதவீத இலக்கினை நோக்கி நகருவதனை நிச்சயப்படுத்தும் வேளையில் உள்நாட்டுப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் ஒத்துழைக்கும் என நாணய சபை எதிர்பார்க்கிறது.

மின்சாரத் தீர்வைகள் மற்றும் எரிபொருள் விலைகளில் அவ்வப்போது  மேற்கொள்ளப்பட்ட குறைப்புக்களின் முக்கிய காரணமாக பணவீக்கமானது தற்போது எதிர்மறையாகத் தொடர்ந்தும் காணப்படுகின்றது. பணவீக்கமானது 2025 நடுப்பகுதியளவில் நேர்மறையாகத் திரும்பலடையுமென எறிவுசெய்யப்பட்டுள்ளது. பணச்சுருக்க நிலைமைகள் இந்த மாத்தில் இருந்து  படிப்படியாகத் தளர்வடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கிடைப்பனவாகவுள்ள தரவுகளின் அடிப்படையிலமைந்த எறிவுகள், பணவீக்கமானது ஆண்டு இறுதியளவில் இலக்கிடப்பட்ட மட்டங்களை அடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டுப் பொருளாதாரமானது இரண்டு ஆண்டு கால சுருக்கங்களிற்குப் பின்னர் 2024இல் வலுவான மீட்சியொன்றினைப் பதிவுசெய்துள்ளதாக அண்மைய வருடாந்த மதிப்பீடுகள் எடுத்துக்காட்டின. பொருளாதாரத்தின் அண்மைய அபிவிருத்திகள் மற்றும் முன்னணிக் குறிகாட்டிகள் இவ்வுத்வேகத்தின் தொடர்ச்சியான போக்கினை எடுத்துக்காட்டுகிறது.

ரூபா பெறுமதியின்  திரவத்தன்மையானது விஞ்சியளவிலான மட்டத்தில் தொடர்ந்தும் காணப்படுகின்றது. தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைப்பாட்டுடன் இசைந்து செல்லும் விதத்தில் சந்தை வட்டி வீதங்கள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றன. தாழ்ந்தளவிலான வட்டி வீதங்களினால் ஆதரவளிக்கப்பட்டு, தனியார் துறைக்கான கொடுகடன் தொடர்ந்து

வலுவாகக் காணப்பட்டது. உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவித்து இப்போக்கானது தொடருமென ஊகிக்கப்படுகிறது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றமானது எதிர்பார்த்ததிலும் பார்க்க மிகவும் சாதகமாகக் காணப்படுகின்றது.ஏற்றுமதிகள் தொடர்ந்து  வலுவாகவுள்ள வேளையில், இறக்குமதிகள் உத்வேகத்தினைப் பெற்றுள்ளமையானது வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைவதற்குக் காரணமாயமைகின்றது. சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள் என்பன வெளிநாட்டு நடைமுறைக் கணக்கினை மேம்படுத்த ஒத்துழைக்கிறது.

அரச பிணையங்கள் சந்தைக்கான வெளிநாட்டு உட்பாய்ச்சல்கள் அண்மையில் உயர்வடைந்துள்ளமையானது, மேம்பட்ட நம்பிக்கையினைப் பிரதிபலிக்கின்றது. மத்திய வங்கியின் மூலம் மேற்கொள்ளப்பட்ட அதிகரித்தளவிலான தேறிய வெளிநாட்டுக் கொள்வனவுகள் மற்றும் பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டத்தின் நான்காவது தொகுதியின் பெறுகை என்பன அலுவல்சார் ஒதுக்குகளை அதிகரிப்பதற்கு உதவி தாக்குப்பிடிக்கக்கூடியதன்மையினை மேம்படுத்துகின்றன. இலங்கை ரூபாவானது 2025இன் இதுவரையான காலப்பகுதியில் சிறியளவிலான பெறுமதித்தேய்வொன்றினைப் பதிவு செய்தது.

பணவீக்கம் மற்றும் வளர்ச்சித் தோற்றப்பாட்டிற்கான இடர்நேர்வுகள் பரந்தளவில் சமநிலையாகத் தொடர்ந்தும் காணப்படுகின்றன. இருப்பினும்,ஏனையவற்றிற்கிடையில், இலங்கைப் பொருளாதாரத்தில் உலகளாவிய வர்த்தகம் மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்றதன்மைகளின் தாக்கத்தினைச் சபை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றது. நாணயக் கொள்கை உருவாக்கமானது முன்னோக்கிய  தன்மையிலான  மற்றும் தரவு சார்ந்த அணுகுமுறையொன்றின் அடிப்படையில் தொடர்ந்தும் காணப்படும். பொருளாதாரம் அதன் முழுமையான இயலளவினை அடைவதற்கு ஆதரவளிக்கும் வேளையில், விலை உறுதிப்பாட்டினைப் பேணுவதில் தோற்றம்பெறுகின்ற இடர்நேர்வுகளை முகாமைத்துவம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சபை உரிய தீர்மானங்களை எடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டொன் பிரியசாத் உயிரிழக்கவில்லை என்கிறார் பொலிஸ்...

2025-04-22 23:28:46
news-image

தபால் மூல வாக்களிப்பின் போது அரச...

2025-04-22 20:33:09
news-image

பொருளாதார முகாமைத்துவத்துக்கு அமைச்சரவையால் விசேட குழு...

2025-04-22 17:33:04
news-image

டொன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் காயம்!

2025-04-22 21:53:35
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும்...

2025-04-22 17:23:42
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் ஊழல், மோசடிகளுக்கு ஒருபோதும்...

2025-04-22 17:27:08
news-image

மாத்தறை சிறையில் குழப்பம் : அதிகாரிகள்...

2025-04-22 21:21:49
news-image

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2025-04-22 21:37:42
news-image

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-04-22 20:39:13
news-image

யாழ் . மாநகர சபையில் யாருக்கு...

2025-04-22 17:17:05
news-image

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட மகனை பார்க்கசென்ற தமிழ்...

2025-04-22 20:04:55
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான பேராயரின்...

2025-04-22 17:25:48