நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த வீதி விபத்துகளில் நேற்று செவ்வாய்க்கிழமை (25), ஒரு இளைஞர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுபொத்த, அவிசாவளை மற்றும் எத்திமலை பொலிஸ் பிரிவுகளில் இந்த விபத்துகள் பதிவாகியுள்ளன.
எதிமலை, கொட்டியாகல 05 ஆம் மைல்கல் வீதி வத்தேகம பகுதியில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதிலில் மோதியுள்ளார்.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் எத்திமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கொட்டியாகல பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, கட்டுபொத்த, பொத்துஹெர வீதியில் தம்பிடிய சந்திக்கு அருகில், வீதியை கடக்கும் பாதசாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி 79 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்தோடு, அவிசாவளை பொலிஸ் பிரிவில் கொழும்பு - ஹட்டன் வீதியில் உள்ள தல்துவ பகுதியில் வீதயைக் கடக்க முற்பட்ட பாதசாரி மீது பஸ் ஒன்று மோதியுள்ளது.
விபத்தில் காயமடைந்த பாதசாரி அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தல்துவ பகுதியைச் சேர்ந்த 69 என தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த வீதி விபத்துக்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM