தேசிய கலை இலக்கியப் பேரவையின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 'நூறு மலர்கள் மலரட்டும்' என்ற தொனிப்பொருளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் புத்தக அரங்க விழாவின் 24ஆவது நிகழ்வு எதிர்வரும் 28, 29, 30ஆம் திகதிகளில் கோண்டாவில் இந்து கல்லூரியில் நடைபெறவுள்ளது.
மார்ச் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இப்புத்தக அரங்க விழாவின் தொடக்க நிகழ்வாக வயிரமுத்து திவ்வியராஜன் ஆக்கத்தில் உருவான 'ஒரு சின்னக்கதை' பாகம் 2 மற்றும் 'சாவை தள்ளி வை' ஆகிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வு ஆசிரியரும் பட்டிமன்ற நடுவருமான த.ஸ்ரீபிரகாஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் வெளியீட்டுரையினை ஜீவநதி சஞ்சிகை மற்றும் வெளியீட்டகத்தின் பிரதம ஆசிரியர் கலாமணி பரணீதரனும், 'சாவை தள்ளி வை' நூல் தொடர்பான அறிமுக உரையினை ஈழத் தமிழ் கலைஞர் ஒன்றியத்தின் தலைவர் வைத்திய நிபுணர் சி.சிவன்சுதனும், 'ஒரு சின்னக்கதை' பாகம் 2 பற்றிய கருத்துரைகளை சட்டத்தரணி பசுபதி ஐங்கரன், ஓய்வுநிலை ஆசிரியர் விஜயா பீரிஸ், சி.மகாலிங்கம், அ.குணசிங்கம், வ.மோகநாதன், தேவ சபா அனுஜன், ஸ்ரீபாலன் சிந்துசன், மாதங்கி யாதவன், சசிகா நித்தியானந்தம், பகீரதன் நிரூசன் ஆகியோரும் நிகழ்ச்சித் தொகுப்பினை மாணவி தர்மிகா உமாசுதசர்மாவும் மேற்கொள்ளவுள்ளனர்.
விசேட கலை நிகழ்வுகளாக கனிஸ்ரனின் நெறியாள்கையில் கே.ஏ.எஸ்.சத்தியமனை நூலக மாணவர்களின் 'வெற்றி வெற்றி' இசைக் கூத்தும், செம்முகம் ஆற்றுகைக் குழுவினரின் தயாரிப்பில் சீலனின் எழுத்துரு, நெறியாள்கையில் 'எங்கே எங்கே குடை எங்கே?', 'எலியார் எங்கே போனார்?' ஆகிய சிறுவர் நாடகங்களும் நடைபெறவுள்ளன.
மேலும், இந்நிகழ்வின் விசேட அம்சமாக மாபெரும் புத்தகக் கண்காட்சியும் மலிவு விற்பனையும் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களும் காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM