(எம்.நியூட்டன்)
காங்கேசன்துறையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்துவதற்கு முறையான திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் குழுவின் தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் முதலானோரின் பங்கேற்புடன் இன்று செவ்வாய்க்கிழமை (25) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
காங்கேசன் துறையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை விடுவிப்பதற்கு பொருத்தமான திட்ட முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியால் கோரப்பட்டுள்ளது. இதற்கு அமைய ஜனாதிபதி மாளிகைக்கான காணியை சுவீகரிப்பதற்கான நடவடிக்கையை தெல்லிப்பழை பிரதேச செயலகம் முன்னெடுத்து வருகிறது.
எனவே, காங்கேசன்துறையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை முறையான அபிவிருத்திக்கு பயன்படுத்துவதற்கு பொருத்தமான திட்ட முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் யாழ். அரசாங்க அதிபரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM