ஆறாவது தடவையாக 2025ஆம் ஆண்டுக்கான 'School Supply Brand' விருதைத் தட்டிச்சென்ற அட்லஸ்!

25 Mar, 2025 | 06:01 PM
image

SLIM-Kantar People’s Awards 2025 நிகழ்வில் ‘School Supply Brand’ என்ற விருதை வென்றுள்ள அட்லஸ் நிறுவனம் தொடர்ந்து 6ஆவது தடவையாகவும் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளது. 

இலங்கையில் கல்வி சார்ந்த உபகரணங்களைப் பொறுத்தவரையில் முன்னணி வர்த்தக நாமமாகத் திகழ்ந்து வருகின்ற அட்லஸ் (Atlas), மிகவும் பிரசித்தி பெற்ற SLIM- Kantar People’s Awards 2025 நிகழ்வில், ‘School Supply Brand of the Year’ என்ற விருதை பெற்றுள்ளது.

தொடர்ந்து ஆறாவது ஆண்டாகவும் அது இச்சாதனையை நிலைநாட்டியுள்ளதுடன், எமது தேசத்தில் பிள்ளைகள் அனைவரும் மகிழ்ச்சிகரமாகவும், வாழ்வை வளமாக்கும் அனுபவத்துடனும் தமது கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு மிகவும் நம்பப்படும் கூட்டாளர் என்ற தனது ஸ்தானத்தை அட்லஸ் மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது.

மக்கள் மனங்களில் இடம்பிடித்து, அவர்களுடைய உண்மையான எண்ணங்களைப் பிரதிபலிப்பதில் புகழ்பெற்றுள்ள SLIM-Kantar People’s Awards என்ற விருதுகள், நாடளாவிய ரீதியில் Kantar முன்னெடுக்கும் விரிவான கருத்துக்கணிப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதுடன், இலங்கை மக்களின் நம்பிக்கையைச் சம்பாதித்து, அவர்களுடைய 1ஆம் தர தெரிவாகத் திகழ்வில் அட்லஸின் இடைவிடாத அர்ப்பணிப்பையும் காண்பிக்கின்றது.

பாடசாலை கற்றல் நடவடிக்கைகளுக்கான பொருட்களை வழங்குவதற்கும் அப்பால், கல்வி வாய்ப்பை அனைவருக்கும் கிடைக்கச் செய்து, வாழ்வை வளம் பெறச் செய்வதில் அட்லஸ் நாமம் கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் போற்றிப் பாராட்டும் வகையில் இந்த அங்கீகாரம் அமைந்துள்ளது.

Atlas Sipsavi, GuruGaru, மற்றும் Atlas Learn போன்ற பல்வேறு முயற்சிகளின் மூலமாக, தான் வழங்கும் ஆதரவை மாணவர்களுக்கு அப்பாலும் நீட்டித்து, அனைவருக்கும் சம வாய்ப்பளிக்கும் மற்றும் ஒன்றுபட்ட ரீதியில் கற்கும் சூழலைத் தோற்றுவிப்பதற்கு பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் அட்லஸ் வலுவூட்டுகின்றது.

Atlas Axillia Co. Ltd நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் துறை தலைமை அதிகாரி திரு. ரந்திக டி சில்வா அவர்கள் இச்சாதனை குறித்து கருத்து தெரிவிக்கையில், “தொடர்ந்து ஆறாவது தடவையாகவும் இந்த கௌரவத்தை சம்பாதித்துள்ளமை, ‘Making Learning Fun’ என்ற எமது தெளிவான நோக்கத்திற்கும், மகிழ்ச்சியான கற்றல் அனுபவங்கள் மூலமாக கல்விப் பயணத்தில் மாற்றத்திற்கு வித்திடுவதற்கும் சிறந்த சான்றாக உள்ளது.

இலங்கையில் எழுத்தறிவு 92% மட்டத்தில் காணப்படுவது உண்மையிலேயே போற்றத்தக்கதொரு சாதனை என்பதுடன், ஒட்டுமொத்த தேசத்துக்கும் பெருமையளிக்கும் ஒரு சிறப்பாகும். எனினும், மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கு பாரிய எதிர்பார்ப்புக்களையும், அழுத்தங்களையும் இந்த நிலைமை தோற்றுவித்துள்ளது.

மகிழ்ச்சியான வழிமுறைகளில் கற்றலை முன்னெடுத்து, மேற்குறிப்பிட்ட சவால்களுக்கு தீர்வுகாணும் வழிமுறைகளை அட்லஸ் வழங்கி வருவதுடன், இலங்கையில் அனைத்து குடும்பங்களும் எம்மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கு இவ்விருது சான்றாக உள்ளது. அவர்களுடைய இடைவிடாத ஆதரவு, கற்றலுக்கான பயண அனுபவத்தை மேம்படுத்த வேண்டும் என்ற எமது இலட்சியத்திற்கு பாரிய உந்துசக்தியாகக் காணப்படுகின்றது,” என்று குறிப்பிட்டார்.

ஆதரவான ஒரு கற்றல் சூழலில் வளம் காண்பதற்கு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கும் உதவுகின்ற உயர் தரம் கொண்ட, பாதுகாப்பான மற்றும் புதுமையான உபகரணங்களை வழங்கி, நிதிச் சுமைகளை தணிவித்து, ஆண்டுதோறும் அர்த்தமுள்ள கற்றல் வாய்ப்புக்களை அட்லஸ் அனைவருக்கும் தோற்றுவித்து வருகின்றது.

எதிர்கால சிற்பிகளுக்கு வலுவூட்டும் அர்ப்பணிப்புடன், இலங்கையிலுள்ள ஒவ்வொரு குழந்தையும் கற்றலை விநோதமாகவும், பெற்றுக்கொள்ளக்கூடியதாகவும், மற்றும் வளம் பெறச் செய்வதாகவும் முன்னெடுக்கச் செய்வதில் அட்லஸ் எப்போதும் அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்றது.

பாடசாலை உபகரணங்கள் துறையில் ஒரு முன்னோடி என்ற ரீதியில், மாணவர்களின் படைப்பாற்றலுக்கு உத்வேகமளித்து, அவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை வளர்க்கும் தயாரிப்புக்களை தொடர்ச்சியாக வழங்கி வந்துள்ள அட்லஸ், கற்றல் ஈடுபாட்டை வளர்க்கச் செய்வதையும், நல்விளைவைத் தோற்றுவிப்பதாக அதனை மேற்கொள்வதையும் உறுதி செய்துள்ளது.

கற்றல் நடவடிக்கைகளை அனைவரும் பெற்றுக்கொள்ளக்கூடியதாகவும், மகிழ்ச்சியானதாகவும் மாற்றியமைக்கும் தனது இலக்கில் தொடர்ந்தும் சிறப்பாகப் பயணிப்பதற்கு அட்லஸ் ஆவலாக உள்ளதுடன், இதுவரை அதன் பயணத்தில் எட்டியுள்ள பெருந்தொகையானோரின் வாழ்வுகளை வளப்படுத்தியுள்ள அதன் அர்ப்பணிப்பைப் போற்றிக் கொண்டாடும் வகையில் இவ்விருது அங்கீகாரம் அமையப்பெற்றுள்ளது.

இடமிருந்து வலப்புறமாக: அட்லஸ் நிறுவன அதிகாரிகளான திரு ஹரின் சமாத் - தயாரிப்பு வகை சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி, திரு. அஷான் விக்கிரமசிங்க - சிரேஷ்ட வர்த்தகநாம முகாமையாளர் - சந்தைப்படுத்தல், நதீகா ஜெயசிங்க - நிறுவன விவகாரங்களுக்கான தலைமை அதிகாரி, திரு. ரந்திக டி சில்வா - சந்தைப்படுத்தல் துறை தலைமை அதிகாரி, திரு. ரஷிந்த பேர்டினான்டோ - சந்தைப்படுத்தல் முகாமையாளர், மற்றும் கசுன் ரணதுங்க - வர்த்தகநாம முகாமையாளர் - சந்தைப்படுத்தல் ஆகியோர் தமக்கு கிடைக்கப்பெற்ற விருதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்ளும் காட்சி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் OPR முடிவு ; பொருளாதார...

2025-04-20 16:38:39
news-image

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் ஆயுள், ஆண்டின்...

2025-04-19 13:08:39
news-image

Durdans Hospital மேம்படுத்திய வசதிகளைக்கொண்ட Urology...

2025-04-17 12:16:50
news-image

'யூனியன் அஷ்யூரன்ஸ்'  சிறந்த பெறுமதியை வழங்கி...

2025-04-17 12:10:32
news-image

வலிமையான மற்றும் கண்களை கவரும் மெல்லிய...

2025-04-16 12:57:00
news-image

SLPL – இலங்கையின் முதல்ஃபிரான்சைஸ் அடிப்படையிலான...

2025-04-16 11:25:42
news-image

Cargills-SLIM-மக்கள் விருதுகள் 2025 விழாவில் 'ஆண்டின்...

2025-04-11 11:40:34
news-image

Prime Group இனால் அரச சேவை...

2025-04-11 12:07:11
news-image

SLT-MOBITEL புத்தாக்கதினம் 2024 ஊடாக ஊழியர்களுக்கான...

2025-04-11 12:14:29
news-image

2024 ஆம் ஆண்டின் வரிக்கு முந்திய...

2025-04-10 14:21:35
news-image

எல்.பீ. ஃபினான்ஸின் புதிய பரிவர்த்தனை அதிகாரியாக...

2025-04-10 11:48:59
news-image

SLT-MOBITEL - ரமழான் காலத்தை முன்னிட்டு...

2025-04-10 11:17:30