இன, மத முரண்­பா­டு­களை தூண்டும் வித­ மாக அண்­மைய நாட்­களில் பதி­வான அனை த்து சம்­ப­வங்­களின் பின்­ன­ணி­யிலும் பொது பலசேனா அமைப்பு இருப்­பது இது­வரை செய்­யப்­பட்­டுள்­ள விசா­ர­ணைகள் ஊடாக தெரி­ய­வந்­துள்­ளது. அவ்­வா­றான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்ட 14 சந்­தேக நபர்கள் இது­வரை கைது செய்­யப்­பட்­டுள்­ளனர் என்று  பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் மா அதி­பரின் அலு­வ­லக பிர­தானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி  தெரி­வித்தார். 

அத்­துடன் இது­வரை சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­ப­டாத வெல்­லம்­பிட்­டிய பள்­ளி­வாசல் மீதான தாக்­குதல், எல்­பிட்­டி­யவில் முஸ்லிம் வர்த்­தக நிலையம் மீதான தீ வைப்பு, வென்­னப்­பு­வையில் முஸ்லிம் வர்த்­தக நிலையம் மீதான தீ வைப்பு தொடர்பில் சந்­தேக நபர்­களை கைது செய்ய  அந்­தந்த பிர­தே­சத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சர்­களின் கீழ் சிறப்புக் குழுக்கள் விசா­ர­ணை­களை தொடர்­வ­தா­கவும் மிக விரைவில் அவர்­களைக் கைது செய்ய முடியும் என  நம்­பு­வ­தா­கவும் அவர்  குறிப்­பிட்டார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர்  சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து வெ ளியி­டு­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நுகே­கொடை பகு­தியில் நான்கு முஸ்லிம் கடைகள் தீ வைக்­கப்­பட்ட சம்­பவம் தொடர்பில் பொது பல சேனா அமைப்பின் உறுப்­பி­னரை நாம் கைது செய்த போது, பொது பல சேனா அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் டிலந்த விதா­னகே ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை நடத்­தினார். 

அந்த சந்­தேக  நபர் தமது அமைப்பை சேர்ந்­தவர் இல்லை எனவும் அவர்  பொது பல சேனாவை சேர்ந்­தவர்   என நிரூ­பிக்­கு­மாறு பொலி­சா­ருக்கு சவால் விடுத்தார். அத்­துடன் குறித்த நட­வ­டிக்­கைகள் தொடர்­பிலும் நிரூ­பிக்­கு­மாறு சவால் விடுத்தார்.

 நான் அவ­ரது பாணியில் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை நடத்தி அதற்கு பதி­ல­ளிக்­க­வில்லை. மாற்­ற­மாக செயலில் காட்­டினோம். குரு­ணாகல் மல்­ல­வ­பிட்­டிய ஜும் ஆ பள்­ளி­வாசல் மீதான பெற்றோல் குண்டுத் தாக்­குதல் தொடர்பில் கைதா­ன­வர்கள் யார்? 

யார் என்ன சொன்­னாலும் கைதா­ன­வர்கள் யாறென்றும் அவர்கள் யாருக்­காக வேலைப் பார்த்­தார்கள் எவர்­க­ளது நிக்ழ்ச்சி நிரல்  என்­பதும் குரு­ணாகல் மக்­க­ளுக்கு நன்கு தெரியும்.

 இது­வரை நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­களின் படிஇ நாட்டில் அண்­மையில் பதி­வான அனைத்து இனஇ மத முரண்­பாட்டு குற்­றங்­களின் பின்­ன­ணி­யிலும்  பொது பல சேனா இருப்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது.

கைதா­கி­யுள்ள அனைத்து சந்­தேக நபர்­க­ளுக்கும் எதி­ரா­கவும்  இன­வாதம், மத­வா­தத்தை தூண்­டு­வோ­ருக்கு எதி­ரா­கவும் 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில்இ அர­சியல் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் உறுப்­பு­ரைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதனைவிட தண்டனை  சட்டக் கோவையின் 291 (1) ஆம் பிரிவின் கீழும் குற்றம் சாட்டப்பட்டே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.' என  பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.