'எம்புரான்' திரைப்படத்தின் முதல் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது

25 Mar, 2025 | 07:03 PM
image

ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் லூசிஃபர். 

இப் படத்தின் இரண்டாம் பாகம் L2 எம்புரான் எனும் பெயரில் உருவாகியுள்ளது.  இப் படத்தை ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. 

இப் படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடா என ஐந்து மொழிகளில் இம் மாதம் 27 ஆம் திகதி வெளியாகவுள்ளது. 

இப் படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.  உலகளாவிய ரீதியில் சுமார் 50 கோடி ரூபாய்க்கு படத்துக்கான முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில் படத்தின் முதல் பாடலான 'ஃபிர் ஸிந்தா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.  தீபக் தேவ் இசையில் தனிஷ் நபர் வரிகளில் ஆனந்த் பாஸ்கர் பாடியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right