எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக நாம் முன்னிற்போம் - ஐக்கிய மக்கள் சக்தி

25 Mar, 2025 | 09:30 PM
image

(எம்.மனோசித்ரா)

இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள பயணத்தடை தொடர்பில் எதிர்க்கட்சி என்ற ரீதியில் அவதானம் செலுத்தியிருக்கின்றோம். இதனை அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் அணுக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (25) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள பயணத்தடை தொடர்பில் எதிர்க்கட்சி என்ற ரீதியில் அவதானம் செலுத்தியிருக்கின்றோம். அதேவேளை அரசாங்கம் இவ்விடயத்தை இராஜதந்திர ரீதியில் அணுக வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக நாம் முன்னிற்போம்.

தேர்தலுக்கான பணிகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். புத்தாண்டு நெருங்குவதால் பிரசார நடவடிக்கைகள் மந்தமாகவே இடம்பெறுகின்றன.

புத்தாண்டின் பின்னர் தீவிரமாக பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்போம். சுமார் 400க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணைக்குழுவும் நீதிமன்றமும் இவ்விவகாரத்தில் நியாயம் வழங்க வேண்டும்.

தேர்தல் ஆணைக்குழு சிறு சிறு காரணிகளுக்காக வேட்புமனுக்களை நிராகரிப்பதை விட, தமக்கு தேவையற்றவர்களை நிராகரிக்கும் பொறுப்பினை மக்களுக்கு வழங்க வேண்டும். தேசபந்து தென்னகோனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கட்சி ரீதியில் கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்கப்படும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்பு சட்டம்...

2025-04-30 17:52:20
news-image

எரிபொருள் விலைகளில் திருத்தம் !

2025-04-30 20:39:27
news-image

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லையாம் !

2025-04-30 20:27:40
news-image

இலங்கை - பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு...

2025-04-30 17:50:20
news-image

வாக்காளர் அட்டைகள் கடைகளில் மீட்பு ;...

2025-04-30 17:34:40
news-image

வெள்ளவத்தை பொதுச்சந்தை பகுதியில் தேசிய மக்கள்...

2025-04-30 18:06:00
news-image

கண்டி - கம்பளை பிரதான வீதியில்...

2025-04-30 17:28:22
news-image

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைகளை...

2025-04-30 17:38:11
news-image

தொழிற்சங்க நடவடிக்கை முன்னேடுக்க தயாராகும் தெல்லிப்பளை...

2025-04-30 17:13:54
news-image

டெங்கு நோயால் 6 பேர் உயிரிழப்பு 

2025-04-30 17:13:07
news-image

பாதுகாப்பு செயலாளர் - பாகிஸ்தான் இராணுவத்...

2025-04-30 17:01:17
news-image

மயிலத்தமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு நீதி கோரி...

2025-04-30 18:23:51