நபர்களுக்கு எதிரான தடை நாட்டுக்கெதிரான தடையாக மாற்றமடையலாம் - பேராசிரியர் பிரதீபா மஹாநாமஹேவா

25 Mar, 2025 | 09:19 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டின் முன்னாள் பாதுகாப்பு படையினருக்கு எதிராக விதிக்கப்படும் தடையானது வருங்காலத்தில் நாட்டுக்கு எதிரானதாகக் கூட மாற்றமடையலாம். எனவே, அரசாங்கம் இது தொடர்பில் தீவிரமாக கரிசணை செலுத்த வேண்டும். மியன்மார், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளும் மிகக் கொடூரமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் நிலையில், எதற்காக இலங்கை மாத்திரம் இலக்கு வைக்கப்படுகிறது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வணிக சட்டப்பிரிவின் பேராசிரியர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டின் முன்னாள் இராணுவத் தளபதிகள் இருவர், முன்னாள் கடற்படை தளபதியொருவர் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த ஒருவர் ஆகியோருக்கு எதிராக பயணத்தடை விதித்துள்ளது. தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது கூட்டத்தொடர் இடம்பெற்று வருகிறது. எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் கொண்டுவரப்படும் யோசனைகளிலிருந்து அமெரிக்கா விலகியிருக்கிறது.

அமெரிக்காவின் எவ்வித ஒத்துழைப்பும் இன்றியே இது இடம்பெறுகிறது. மனித உரிமைகள் பேரவைக்குள் தான் ஏதெனுமொரு நாட்டுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனில், அவை தொடர்பில் ஆராய்ந்து மனித அறிக்கை தயாரிக்கப்படும். ஆனால் மனித உரிமைகள் பேரவைக்கும் தடைகளை விதிக்க முடியாது. பாதுகாப்பு சபைக்கு சென்ற பின்னரே இது குறித்த தீர்மானங்களை எடுக்க முடியும்.

ஆனால் இங்கு அவ்வாறு எந்த நடைமுறையும் இடம்பெறவில்லை. தடை விதிப்பதாயின் ஒரு நாட்டுக்கு எதிராகக் கூட விதிக்க முடியும். இதற்கு முன்னர் எமது இராணுவத்தினர் 58 பேருக்கு எதிராக அமெரிக்கா தடை விதித்திருக்கிறது. அந்த வழியில் தான் தற்போது பிரித்தானியாவும் இவ்வாறு தடை விதித்துள்ளது. அடிப்படை மனித உரிமை மீறல்கள், பாலியல் வன்கொடுமைகள் முதலான காரணிகளை அடிப்படையாகக் கொண்டே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு நபர்களுக்கு எதிராக விதிக்கப்படும் தடையானது ஒரு சந்தர்ப்பத்தில் நாட்டுக்கு எதிரானதாகக் கூட மாற்றமடையக்கூடும்.

இவ்வாறான நிலைமையை நாமே உருவாக்கிக்கொண்டோம். அதற்கு சிறந்த உதாரணம் 2015ஆம் ஆண்டு அரசாங்கம் தேசிய நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவொன்றை நியமித்து பரிந்துரைகளை வழங்கியது. ஆனால், இன்னும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இவ்வாறு தேசிய ரீதியில் பல்வேறு ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த ஆணைக்குழுக்களில் உள்ள நிபந்தனைகள் எந்தவொரு அரசாங்கத்தாலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஏனைய நாடுகளிலுள்ள புலம்பெயர் இலங்கையர்களுக்கு சார்பானவர்களது அழுத்தங்களும் இதில் தாக்கம் செலுத்துகின்றன. வெறுமனே முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு எவ்வாறு தடை விதிக்க முடியும்?

எவ்வித விசாரணைகளும் இன்றி பக்கசார்பாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அடிப்படையின்றி எடுக்கப்பட்டுள்ள இந்த தீர்மானத்துக்கு எதிராக அரசாங்கம் என்ற ரீதியில் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை பொருளாதாரக் குற்றமிழைத்துள்ளதாக யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவ்வாறெனில் இதனை அடிப்படையாகக் கொண்டு நாட்டுக்கு தடை விதிக்கப்படக்கூடிய அச்சுறுத்தல் கூட காணப்படுகிறது.

ஜி.எஸ்.பி.பிளஸ் வரி சலுகை கூட நீக்கப்படக்கூடிய வாய்ப்புள்ளது. இஸ்ரேல், மியன்மார் போன்ற நாடுகளில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லையா? எதற்காக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை மாத்திரம் இலக்கு வைக்கப்படுகிறது? எனவே வெளிநாட்டலுவல்கள் அமைச்சு இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்திடம் இது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். இனிவரும் காலங்களிலாவது இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படுவதை தடுப்பதற்கு தற்போதைய அரசாங்கமாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்பு சட்டம்...

2025-04-30 17:52:20
news-image

எரிபொருள் விலைகளில் திருத்தம் !

2025-04-30 20:39:27
news-image

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லையாம் !

2025-04-30 20:27:40
news-image

இலங்கை - பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு...

2025-04-30 17:50:20
news-image

வாக்காளர் அட்டைகள் கடைகளில் மீட்பு ;...

2025-04-30 17:34:40
news-image

வெள்ளவத்தை பொதுச்சந்தை பகுதியில் தேசிய மக்கள்...

2025-04-30 18:06:00
news-image

கண்டி - கம்பளை பிரதான வீதியில்...

2025-04-30 17:28:22
news-image

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைகளை...

2025-04-30 17:38:11
news-image

தொழிற்சங்க நடவடிக்கை முன்னேடுக்க தயாராகும் தெல்லிப்பளை...

2025-04-30 17:13:54
news-image

டெங்கு நோயால் 6 பேர் உயிரிழப்பு 

2025-04-30 17:13:07
news-image

பாதுகாப்பு செயலாளர் - பாகிஸ்தான் இராணுவத்...

2025-04-30 17:01:17
news-image

மயிலத்தமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு நீதி கோரி...

2025-04-30 18:23:51