இன்சுலின் செலுத்திக்கொள்வதால் பக்க விளைவு உண்டாகுமா?

25 Mar, 2025 | 03:50 PM
image

இன்றைய திகதியில் உலகிலேயே தெற்காசிய நாடுகள் தான் அதிக அளவிலான நீரிழிவு நோயாளிகளின் இருப்பிடமாக உயர்ந்து வருகிறது. 

அதே தருணத்தில் வாழ்க்கை நடைமுறை மாற்றத்தின் காரணமாகவும், உணவு முறையை மாற்றி அமைத்துக் கொண்டதன் காரணமாகவும் எம்மில் பலரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். 

எம்முடைய உடலில் உள்ள ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவில்லை என்றால் அதனால் சர்க்கரை நோய் அதிகரித்து உடல் உறுப்புகளை இழக்க நேரிடும். 

இதனால் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என வைத்திய நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் ரத்த சக்கரையின் அளவை கட்டுப்படுத்திக் கொள்வதில் இன்சுலினுக்கு அதிக பங்களிப்பு உள்ளது என வைத்தியர்கள் இன்சுலினை செலுத்திக் கொள்ளுமாறு பரிந்துரை செய்வார்கள். 

ஆனால் எம்மில் பலரும் இன்சுலினைத் தொடர்ந்து பாவித்தால் பக்க விளைவு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் அதனை தவிர்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்சுலின் செலுத்திக் கொள்வதால் பக்க விளைவு ஏற்படுமா? இல்லையா? என்பது குறித்து வைத்தியர்கள் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்.‌

உடலில் உள்ள ரத்த சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்காக வைத்திய நிபுணர்கள் இன்சுலின் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் அதனை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். 

சிலருக்கு இன்சுலின் எடுத்துக் கொள்ளும் அளவை வைத்தியர்கள் அதிகரித்தால் அதனை நோயாளிகள் ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் இன்சுலினை தொடர்ந்து பாவித்தால் பக்க விளைவு ஏற்படக்கூடும் என்ற அச்சமே காரணம்.

இன்சுலின் செலுத்திக் கொள்பவர்களுக்கு சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இல்லாததற்கான காரணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். 

இன்சுலின் செலுத்திக் கொள்வதில் முறையற்ற அணுகு முறையை கையாளுவதால் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். இன்சுலின் செலுத்தி கொள்பவர்களின் 20 சதவீதத்தினர் இதனை எப்படி முறையாக பயன்படுத்த வேண்டுமோ...! 

அப்படி செலுத்திக் கொள்வதில்லை என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.  இதன் காரணமாக இன்சுலின் செலுத்திக் கொள்பவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாமல் உயர்கிறது.

மேலும் எம்முடைய உடலில் செலுத்திக் கொள்ளும் இன்சுலினின் ஆயுள் காலம் என்பது மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை மட்டும் தான்.

அதற்குள் இன்சுலின் தன் பணியை செய்துவிட்டு கடந்து விடும். எனவே இன்சுலினை செலுத்திக் கொள்வதில் முழுமையான விழிப்புணர்வு அவசியமாகிறது.

அதே தருணத்தில் எம்முடைய சர்க்கரை நோயாளிகளில் பெரும்பான்மையானவர்கள் ஒரே இடத்தில் இன்சுலின் ஊசியை செலுத்திக் கொள்கிறார்கள். இந்த முறையின் காரணமாகவும் இவை பலனளிக்காமல் போகக்கூடும்.

இன்சுலின் மருந்தினை அதற்குரிய குளிர்சாதன வசதியுடன் பராமரிக்க வேண்டும். இதில் ஏதேனும் சிறிய அளவிலான மாற்றம் ஏற்பட்டாலும் அத்தகைய இன்சுலின் மருந்தினால் எமக்கு சாதகமான அம்சங்களை விட பாதகமான அம்சங்களே ஏற்படக்கூடும்.‌

மேலும் இன்சுலின் மருந்தினை முறையான வெப்ப நிலையில் பராமரிக்க வேண்டும். இதனை மேற்கொள்ள தவறினால் இன்சுலின் செலுத்தினாலும் பலன் தராது.

இன்சுலின் செலுத்திக்கொண்டாலும் வாழ்க்கை நடைமுறை - உணவு முறையில் வைத்தியர்கள் பரிந்துரைத்த மாற்றங்களை உறுதியாக பின்பற்ற வேண்டும். ஆனால் எம்மில் பலரும் சர்க்கரை நோய் பாதிப்பிற்காக இன்சுலின் செலுத்திக் கொள்வார்கள்.

 ஆனால் மாவுச்சத்து உள்ளிட்ட நாவின் சுவைக்கு கட்டுப்பாடு வைத்துக் கொள்ளாமல்... விரும்பிய வண்ணம் பசியாறுவார்கள். 

இதன் காரணமாகவும் இன்சுலின் பக்க விளைவை ஏற்படுத்தக் கூடும். உடற்பருமன் ஏற்பட்டாலும் இன்சுலின் செலுத்திக் கொள்வதால் ரத்தத்தின் சர்க்கரை அளவு கட்டுப்படுத்த இயலாது. இதனால் இன்சுலின் செலுத்திக் கொள்பவர்கள் தங்களின் உடல் எடை மீதும் கவனம் செலுத்த வேண்டும்.

பெண்கள் கருவுற்றிருக்கும் காலம்- மாதவிடாய் சுழற்சி ஏற்படும் காலம் -மாதவிடாய் சுழற்சி நிற்கும் காலம் - ஆகிய தருணங்களின் போது ஹோர்மோன் சுரப்பியில் சமச்சீரற்ற தன்மை காரணமாக அவர்களுக்கு இன்சுலின் செலுத்திக் கொண்டாலும் அவை பலன் தருவதில்லை. இத்தகைய தருணங்களில் வைத்தியர்களின் பரிந்துரையை முழுமையாக பின்பற்ற வேண்டும்.

- வைத்தியர் சிவபிரகாஷ்

தொகுப்பு : அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்ஃபிளமெட்ரி மயோஃபைப்ரோபிளாஸ்ரிக் கட்டி பாதிப்பிற்குரிய நவீன...

2025-04-22 16:37:00
news-image

யாரெல்லாம் கத்தரிக்காய் உண்பதை தவிரக்க வேண்டும்?

2025-04-22 15:32:32
news-image

ஹெமாஞ்சியோமா பாதிப்பிற்குரிய நவீன லேசர் சிகிச்சை

2025-04-21 14:22:41
news-image

தாகம் இல்லாவிட்டாலும் தண்ணீர் அருந்துங்கள்…!

2025-04-21 13:10:31
news-image

மண்ணீரல் நரம்பு மறு சீரமைப்பு சிகிச்சை

2025-04-19 17:32:59
news-image

நீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுகள்

2025-04-19 15:47:07
news-image

பெரியனல் அப்ஸெஸ் : ஆசனவாயில் ஏற்படும்...

2025-04-18 18:33:58
news-image

பூஞ்சைகளை நுகர்வதால் ஆரோக்கியம் கெடலாம்

2025-04-18 17:44:44
news-image

தர்பூசணி விதையில் இவ்வளவு நன்மைகள் ஒளிந்திருக்கா?

2025-04-18 12:47:04
news-image

ஹைப்பர்ஸ்ப்ளெனிசம் எனும் மண்ணீரலில் ஏற்படும் பாதிப்பை...

2025-04-18 10:51:51
news-image

சிசேரியனுக்கு பின்னராக முதுகு வலி தீர்வு...

2025-04-18 12:52:24
news-image

புற்றுநோய் ஆபத்தை உருவாக்கும் ஞானப்பல்? 

2025-04-16 19:44:45