(எம்.மனோசித்ரா)
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கே சவாலாக அமைந்துள்ளது. இந்த தேர்தலில் அரசாங்கத்தின் வாக்குகள் சிதறப் போகின்றன. ஆனால் எமக்கு 18 இலட்சம் மேலதிக வாக்குகள் கிடைக்கவுள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் செவ்வாய்க்கிழமை (25) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போது மாவட்டத்துக்கு மாவட்டம் சென்று மக்கள் சந்திப்புக்களை நடத்தி வருகின்றோம். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் அவற்றில் பங்கேற்று வருகின்றார். இந்த தேர்தல் எமக்கு சவாலானதல்ல. மாறாக அரசாங்கத்துக்கு சவாலானதாகும்.
1982ஆம் ஆண்டு விஜேவீர தேர்தலில் போட்டியிட்ட நாள் முதல் ஜே.வி.பி.யின் வாக்கு வங்கி 3 சதவீதமாக மாத்திரமே காணப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் காரணமாகவே தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களித்தனர். அவ்வாறு வாக்களித்தவர்கள் இன்று அதிருப்தியிலுள்ளர்.
அதேவேளை தேசிய மக்கள் சக்திக்கு கடந்த தேர்தல்களில் கிடைக்கப் பெற்ற வாக்குகள் இம்முறை சிதறப்போகின்றன. இவர்களின் வாக்குகள் பொதுஜன பெரமுன, கதிரை உள்ளிட்டவற்றுக்கே செல்லும்.
எமது வாக்கு வங்கியில் எந்த பிரச்சினையும் இல்லை. எனினும் கடந்த தேர்தல் வழங்கப்படாமலிருந்து 18 இலட்சம் வாக்குகளும் இம்முறை எமக்கே கிடைக்கும்.
நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் நீதிமன்றத்துக்கு செல்லவுள்ளதோடு, தேர்தல் ஆணைக்குழுவுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கின்றோம்.
ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலை மாத்திரம் இலக்காகக் கொண்டு அன்றி, அந்த பேச்சுவார்த்தைகளை எதிர்கால அரசியலை இலக்காகக் கொண்டு முன்னெடுத்துச் செல்வோம்.
அரசாங்கம் வரவு - செலவு திட்டத்தில் மக்களுக்கு எவ்வித நிவாரணங்களையும் வழங்காமல், புத்தாண்டுக்கு உணவுப் பொதி வழங்குகின்றது. இது தேர்தலை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டமாகும். தேர்தல் ஆணைக்குழு இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM