2024 ஆம் ஆண்டில் கண்டி பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்திய பிரஜையான பட்டேலுக்கு 04 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மாத்தளை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பட்டேலுக்கு எதிராக 85 மில்லியன் ரூபாய் அபராதம் விதித்த நீதவான், கிரிக்கெட் வீரர் உபுல் தரங்கவுக்கு 02 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட்டுள்ள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் 2024 ஆம் ஆண்டில் கண்டி பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்தில் மார்ச் மாதம் 08ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை நடைபெற்றது.
இதன்போது, கண்டி சாம்ப் ஆர்மி அணியின் உரிமையாளரான பட்டேல், கிரிக்கெட் வீரர் உபுல் தரங்கவை ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட அழைத்துள்ளார்.
பின்னர் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க இது தொடர்பில் இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சின் விசேட விசாரணை பிரிவில் முறைப்பாடு அளித்தார்.
இதனையடுத்து, பட்டேலுக்கு எதிராக மாத்தளை மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவருக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டது.
ஆனால் பட்டேல் நீதிமன்றில் ஆஜராகாமல் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் பட்டேலுக்கு எதிராக நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சிகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 04 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM