பொங்கலுக்கு மோதிக்கொள்ளும் ஜனநாயகன் - பராசக்தி

25 Mar, 2025 | 03:16 PM
image

2026ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக விஜய்யின் 'ஜனநாயகன்' மற்றும் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. 

ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஜனநாயகன் திரைப்படம் வெளியாவது உறுதியாகியுள்ளது. இது விஜய் நடிக்கும் கடைசிப் படம் என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். 

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பராசக்தியும் பொங்கல் ரிலீஸ் என படத் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். 

அந்த வகையில் பொங்கலுக்கு ஜனநாயகன் மற்றும் பராசக்தி ஆகிய திரைப்படங்கள் மோதிக் கொள்வதால் இரண்டுக்கும் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கோட் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்திருந்ததும் இனி நீங்கள் தான் சிவா என விஜய் கூறியதும் பல விமர்சனங்களுக்கு ஆரம்பமாகயிருந்த நிலையில் தற்போது இரண்டு படங்களில் எது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right