முன்னாள் இராணுவத் தளபதிகள், முன்னாள் கடற்படை தளபதி ஆகியோருக்கு பிரித்தானியா விதித்துள்ள தடை முற்றிலும் ஒருதலைப்பட்சமானது - சரத் வீரசேகர

25 Mar, 2025 | 04:59 PM
image

(இராஜதுரை ஹஷான்)

 

முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய ஆகியோருக்கு பிரித்தானியா விதித்துள்ள தடை முற்றிலும் ஒருதலைபட்சமானது. பிரித்தானியாவின் இந்த தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இலங்கையின்  பாதுகாப்பு துறையின் முன்னாள்  உயர் அதிகாரிகள் மூவர் உட்பட கருணா அம்மான் என்று அறியப்படும் விநாயகமூர்த்தி  முரளிதரன் ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடை தொடர்பில் குறிப்பிடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

விடுதலை புலிகள் அமைப்பினை இலங்கையில் இல்லாதொழித்தாலும் அந்த அமைப்பின் கொள்கையினை கொண்டவர்கள் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் இன்றும் செல்வாக்கு செலுத்துகின்றனர். விடுதலைப் புலிகள் அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பிரித்தானியாவில் வாழ்கின்றனர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவிடம் பிரித்தானியா பலமுறை எடுத்துரைத்தது.

இருப்பினும் மஹிந்த ராஜபக்ஷ மேற்குலக நாடுகளின்  அறிவுறுத்தலுக்கு அடிபணியாமல் நாட்டு மக்களுக்கு வழங்கிய ஆணைக்குழு அமைய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

இதன் பின்னரே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஊடாக பிரித்தானியா இலங்கைக்கு  எதிராக பல தீர்மானங்களை கொண்டு வந்தது. பிற்பட்ட காலங்களில் இலங்கைக்கு எதிராக பிரேரணைகளை கொண்டு வரும் நாடுகளுக்கு பிரித்தானியா முழுமையாக ஆதரித்துள்ளது.

முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வா,முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய உட்பட கருணா அம்மான் ஆகியோருக்கு பிரித்தானியா விதித்துள்ள தடை முற்றிலும் ஒருதலைபட்சமானது.

இந்த தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக  அறிவிப்பதற்கு முன்னர் இவர்களின் நிலைப்பாட்டை பிரித்தானியா கோரியதா, தன்னிச்சையான முறையில் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் இந்த தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரிக்க வேண்டும். எதிர்வரும் செப்டெம்பர் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல்  மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தலை மையப்படுத்திய வகையில் புதிய பிரேரணை ஒன்றை கொண்டு வரவுள்ளதாக  பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்தோ – பசுபிக் பிராந்திய பணிப்பாளர்  பென் மெல்லர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் உள்ளடக்கம் இலங்கைக்கு எதிரானதாகவே அமையும். நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இலங்கைக்கு எதிரான செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றன. 

சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை கொண்டு செல்லும் செயற்பாடுகள் மறைமுகமாகவே முன்னெடுக்கப்படுகிறது.இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயற்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 174...

2025-04-21 10:37:57
news-image

சாமர சம்பத்துக்கு விளக்கமறியல் நீடிப்பு

2025-04-21 11:16:44
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்துவதற்கு தற்காலிக தடைவிதிக்கவேண்டும்...

2025-04-21 11:05:15
news-image

மைத்திரிபால சிறிசேன சி.ஐ.டி.யில் ஆஜர் !

2025-04-21 10:52:39
news-image

ஹட்டனில் லொறி விபத்து - மூவர்...

2025-04-21 10:27:27
news-image

மதுபான களியாட்டத்தில் தகராறு ; கூரிய...

2025-04-21 10:22:17
news-image

தமிழர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பது...

2025-04-21 10:27:18
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த 167...

2025-04-21 09:57:23
news-image

பொலன்னறுவையில் கார் - மோட்டார் சைக்கிள்...

2025-04-21 09:39:54
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன்...

2025-04-21 09:02:07
news-image

சில பகுதிகளில் ஆரோக்கியமான நிலையில் காற்றின்...

2025-04-21 10:57:30
news-image

இன்றைய வானிலை

2025-04-21 06:17:24