•ஆண்டுக்கான வருமான வரிக்குப் பின்னரான இலாபம் - ரூ.651 மில்லியன்
•தேறிய ஆதாயங்கள் ரூ.11 மில்லியனாக அதிகரித்துள்ளன.
•மொத்த சொத்துக்கள் ரூ.10 பில்லியனால் அதிகரித்துள்ளன
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31 அன்று முடிவடைந்த ஆண்டிற்கான கார்கில்ஸ் வங்கியின் பெறுபேறுகள், இலாபத்தில் ஆண்டுக்கு ஆண்டு 48% அதிகரிப்பை எடுத்துக்ககாட்டியுள்ளன.
2024 ஆம் ஆண்டிற்கான வரிக்குப் பிந்தைய இலாபம் ரூ.651 மில்லியனாக ஆகும். தேறிய வட்டி வருமானம் ரூ.3.589 பில்லியன் ஆகும்.
2024 ஆம் ஆண்டில், நிதிச் சொத்துக்களிலிருந்து பெறப்பட்ட தேறிய இலாபம் ரூ. 11 மில்லியன் அதிகரித்து, மொத்தமாக ரூ. 276 மில்லியனை எட்டியது.
மதிப்பாய்வு செய்யப்பட்ட காலகட்டத்தில், நிதிச் சொத்துகளின் அங்கீகாரம் இரத்து செய்யப்பட்டதன் விளைவாக பெறப்பட்ட மூலதன ஆதாயங்கள் ரூ. 493 மில்லியன் அதிகரித்ததன் காரணமாக, ஏனைய வருமானங்கள் மொத்தம் ரூ. 670 மில்லியனை எட்டியது.
எனினும், அந்நியச் செலவாணி ஆதாயங்களில் ஏற்பட்ட குறைவின் காரணமாக, தேறிய பிற செயற்பாடுகளில் 76% வீழ்ச்சி ஏற்பட்டதால், அந்த வருமானம் ரூ. 61 மில்லியனாகக் காணப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM