(இராஜதுரை ஹஷான்)
பூநகரி பிரதேச சபை, மன்னார் பிரதேச சபை, தெஹியத்தகண்டிய பிரதேச சபை ஆகிய உள்ளூர் அதிகார சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் புதன்கிழமை (26) நண்பகலுடன் நிறைவடைவதுடன், வேட்புமனுக்கள் வியாழக்கிழமை (27) நண்பகல் வரை கையேற்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
2025ஆம் ஆண்டு 1ஆம் இலக்க (விசேட ஏற்பாடுகள்) உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.
கிளிநொச்சி தேர்தல் மாவட்டம் பூநகரி பிரதேச சபை, மன்னார் தேர்தல் மாவட்டம் மன்னார் பிரதேச சபை, அம்பாறை தேர்தல் மாவட்டம் தெஹியத்தகண்டிய பிரதேச சபை, காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபை ஆகிய பிரதேச சபைகளை தவிர்த்து ஏனைய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை கையேற்றல் கடந்த வியாழக்கிழமையுடன் (20) நிறைவடைந்தது.
குறித்த காலப்பகுதியில் 25 மாவட்டங்களிலும் 107 அரசியல் கட்சிகளும் 49 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.
கிளிநொச்சி தேர்தல் மாவட்டம் பூநகரி பிரதேச சபை, மன்னார் தேர்தல் மாவட்டம் மன்னார் பிரதேச சபை, அம்பாறை தேர்தல் மாவட்டம் தெஹியத்தகண்டிய பிரதேச சபை ஆகியவற்றுக்கான கட்டுப்பணம் செலுத்தல் மார்ச் 10ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், கட்டுப்பணம் செலுத்தல் புதன்கிழமை (26) நண்பகலுடன் நிறைவடையவுள்ளது.
குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான வேட்புமனுக்கள் திங்கட்கிழமை (24) ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், வழங்கப்பட்ட கால அவகாசம் வியாழக்கிழமை (27) நிறைவடைகிறது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு இம்முறை 1 கோடியே 72 இலட்சத்து 96,330 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 155,976 பேர் முதல் தடவையாக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு தேருநர் இடாப்புக்கு அமைவாக கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் நடைபெற்றன. இவ்விரு தேர்தல்களிலும் 17,440,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
2024ஆம் ஆண்டு தேருடர் இடாப்பின் பதிவுகளுடன், இம்முறை 155,976 பேர் புதிதாக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதற்கமைய இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 17,296,330 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM