SLISB மறுசீரமைப்பு இழப்பான 45 பில்லியன் ரூபாயை உள்வாங்கிய நிலையில், கொமர்ஷல் வங்கி 2024 இல் சிறப்பான செயற்றிறன் முடிவுகளை வெளியிட்டுள்ளது

25 Mar, 2025 | 02:26 PM
image

பல்வேறு துணை நிறுவனங்கள் மற்றும் இணை நிறுவனங்களை உள்ளடக்கிய நிலையில்  இலங்கையின் மிகப் பாரிய தனியார் துறை வங்கியாக திகழும் கொமர்ஷல் வங்கிக் குழுமமானது கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வெளியிட்டுள்ள தனது 2024 வருடாந்த நிதிநிலை அறிக்கைகளில் விதிவிலக்கான வலுவான நிதியியல் செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. 

குறைபாடுக் கட்டணங்கள் மற்றும் பிற இழப்புகளுக்கான விவேகமான ஏற்பாடுகள், பயனுள்ள ஐந்தொகை முகாமைத்துவம் மற்றும் வலுவான கடன் வழங்கல் வளர்ச்சி ஆகியவை வங்கியினால் நடத்தப்பட்ட இலங்கை சர்வதேச இறையாண்மைப் பத்திரங்களின் (SLISB) மறுசீரமைப்பினால் ஏற்பட்ட கணிசமான இழப்பைத் தணிப்பதற்கு  உதவியது.

கடந்த 2024 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் SLISB களின் மறுசீரமைப்பின் மூலம் குழுமமானது அதன் முழு நிகர இழப்பான ரூ 45.11 பில்லியனை அங்கீகரித்துள்ளது. இதன் விளைவாக டிசம்பர் 31, 2024 இல் முடிவடைந்த 12 மாதங்களுக்;கான மொத்த வருமானம் 19.50% ஆல் குறைவடைந்து ரூ 274.98 பில்லியனை பதிவு செய்துள்ளது. 

எவ்வாறாயினும், முதன்மையாக SLISB  களை பொறுத்தவரையில் ரூ. 62.30 பில்லியனின் நிகர குறைபாடின் எதிரிடையான மாற்றமானது, ஒட்டுமொத்த தாக்கத்தை கணிசமாகக் குறைத்தது. குறைந்த வட்டி வீதங்கள் காரணமாக வட்டி வருமானமானது 7.54% ஆல்  குறைவடைந்து ரூ.275.22 பில்லியனை பதிவு செய்துள்ளது. இது குழுமத்தின் உச்ச வரையறை நிலையை மேலும் பாதித்தது.   

பணவைப்புகளை சரியான நேரத்தில் மறு விலை நிர்ணயம் செய்தல் மற்றும் வங்கியின் வலுவான CASA  அடிப்படை, என்பன காரணமாக மொத்த வட்டிச் செலவுகள் 25.63% ஆல் குறைவடைந்து ரூ.157.08 பில்லியனை பதிவு செய்தது. இதே வேளை குழுமத்தின் நிகர வட்டி வருமானமானது 2023 ஆம் ஆண்டில் ரூபா. 86.41 பில்லியனாக இருந்த நிலையில் 36.71மூ சிறப்பான வளர்ச்சியுடன் ரூபா. 118.13 பில்லியனை பதிவு செய்தது.

தனித்தனியாக எடுத்துக் கொண்டால், கொமர்ஷல் வங்கியானது வரிக்கு முந்தைய இலாபமாக ரூ 95.53 பில்லியனையும், வரிக்குப் பிந்தைய இலாபமாக ரூ 54.07 பில்லியனையும் பதிவு செய்துள்ளது. இதற்கிணங்க மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டில், முறையே 199.67% மற்றும் 164.28% வளர்ச்சியைப் பதிவுசெய்தது. பங்கொன்றின்  அடிப்படை வருமானமானது 2023 இல் ரூ.14.89 ஆக இருந்த நிலையில் ரூ.37.74 ஆக உயர்ந்தது.

கொமர்ஷல் வங்கியின் தலைவர் சர்ஹான் முஹ்ஸின் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்