தேர்தல் முறைப்பாடுகள் விடயத்தில் பொலிஸாரின் முகாமைத்துவம், தேர்தல் கடமைகளின்போது அவர்களின் வகிபாகம் தொடர்பாக வட மாகாணத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று (24) கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்த கலந்துரையாடல் கிளிநொச்சியில் உள்ள தனியார் விடுதியொன்றில் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது.
இதில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இணைய வழி செயலி (Zoom) ஊடாக இணைந்துகொண்டார்.
இதன்போது தேர்தல் விடயங்கள், கடமைகள், பாதுகாப்புத் துறையினரின் செயற்பாடுகள் தொடர்பாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் (சட்டம், விசாரணை மற்றும் திட்டங்கள்) பி.பீ.சி.குலரத்ன, கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், பொலிஸ் திணைக்களத்தின் சட்ட பிரிவுக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர, யாழ்ப்பாண மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் உதவித் தேர்தல்கள் ஆணையாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், வட மாகாணத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், தேர்தலுடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM