2024 தேசிய விற்பனை விருது வழங்கும் நிகழ்வில் HNB ஏழு விருதுகளுடன் பல வெற்றிகளைப் பெற்றது

25 Mar, 2025 | 12:37 PM
image

SLIM தேசிய விற்பனை விருதுகள் 2024 இல், HNB மதிப்புமிக்க ஏழு விருதுகளைப் பெற்று, வங்கித் துறையில் தனது சிறந்து விளங்கும் திறனை மீண்டும் நிரூபித்தது.

இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM) ஆண்டுதோறும் நடத்தும் தேசிய விற்பனை விருது வழங்கும் நிகழ்வில், இலங்கையின் அனைத்து வணிகத் துறைகளிலும் உள்ள விற்பனை நிபுணர்களின் வெற்றியை அங்கீகரிக்கும் முக்கியமான விருது வழங்கும் நிகழ்வாகும்.

விருது வழங்கும் நிகழ்வின் சிறப்பம்சமமாக HNB வணிக வளர்ச்சிப் பிரிவின் சத்துர கொடிகார, பிற 21 தொழில்களுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு எதிராகப் போட்டியிட்டு, "அனைத்து தொழில்கள்" பிரிவின் கீழ் "ஏனைய விற்பனை பிரிவின் துணை – பிரதி முகாமையாளர் " என்ற வகையில் வெண்கல விருதை வென்றார்.

இந்த விருது வழங்கும் நிகழ்வில், "அனைத்து தொழில்கள்" பிரிவின் கீழ், வட பிராந்தியத்தின் HNB பிராந்திய வணிகத் தலைவர் நிஷாந்தன் கருணைராஜ், "பிராந்திய விற்பனை முகாமையாளர்" பிரிவில் திறமை விருது மற்றும் HNB லீசிங் பிரிவின் பாஷித் வீரசிங்கம், "ஏனைய விற்பனை ஆதரவு ஊழியர்கள் – நிறைவேற்று அதிகாரமல்லாத" பிரிவில் திறமை விருது ஆகியவற்றை வென்றனர். 

இது HNB இன் வங்கியியல் துறையில் மட்டுமல்லாமல், வங்கியின் நெகிழ்வுத்தன்மை மற்றும் தகவமைப்பு திறன் ஆகியவற்றைக் காட்டுகிறது, மேலும் பல்வேறு துறைகளில் வெற்றி பெறும் திறனையும் இது வெளிப்படுத்துகிறது.

வங்கித் துறையில் காட்டிய குறிப்பிடத்தக்க திறமைகளுக்காக, HNB நிகவெறட்டிய வாடிக்கையாளர் பிரிவின் அகில் அஹமட், "விற்பனை நிறைவேற்று" பிரிவில் வெள்ளி விருதை வென்றார். மேலும், HNB வணிக வளர்ச்சிப் பிரிவின் லக்ஷான் ஹசிந்து, தனது தனித்துவமான திறமைகளைக் காட்டி, "விற்பனை மேற்பார்வையாளர்" பிரிவில் வெள்ளி விருதை வென்றார்.

மேலும், வங்கியின் வெற்றிக்கு அவர்கள் அளித்த பங்களிப்பைப் பிரதிபலிக்கும் வகையில், HNB SOLO பிரிவின் தசுன் உத்துருவெல்ல, "பிராந்திய முகாமையாளர்" பிரிவில் வெண்கல விருதையும், HNB SOLO பிரிவின் விஸ்வ வெலகமதர, "விற்பனைத் துறையில் முன்னணி குழுக்கள்" பிரிவில் வெண்கல விருதையும் வென்றனர். இந்த வெற்றிகள், பல்வேறு விற்பனைப் பாத்திரங்களில் HNB இன் சிறந்து விளங்கும் திறனை நன்கு வெளிப்படுத்துகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்