புற்று நோயால் பாதிக்கப்பட்ட பிரபல கராத்தே பயிற்சியாளர் காலமானார்

25 Mar, 2025 | 11:17 AM
image

புற்று நோய் பாதிப்பால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல கராத்தே பயிற்சியாளர் ஷிகான் ஹுசைனி சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

1986 ஆம் ஆண்டு வெளியான “புன்னகை மன்னன்” திரைபடத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷிகான் ஹுசைனி. 

இவர் சில திரைப்படங்களில் நடித்துள்ளதுடன் விஜய் நடித்த “ பத்ரி” திரைப்படத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளராகவும் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு ஓர் திருப்புமுனையாக அமைந்தது.

கடந்த 2022 ஈம் ஆண்டில் வெளியான “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தின் இவரது நகைச்சுவை கலந்த நடிப்பு கவனத்தை ஈர்த்தது. 

கராத்தே மற்றும் வில்வித்தை பயிற்சியாளரான இவர், 400க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சிகளை அளித்துள்ளார்.

60 வயதான இவர் கடந்த 22 நாட்களாக வைத்தியசாலையில் தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை (24) நள்ளிரவு 1.45 மணியளவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தான் உயிரிழந்த மூன்று நாட்களில் தனது உடல் உறுப்புகளை ஸ்ரீ ராசந்திரா வைத்தியசாலை மற்றும் பல்கலைகழகத்திற்கு தானம் செய்ய விரும்புவதாகவும் ஷிகான் ஹுசைனி ஏற்கனவே காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right