எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இரு வெவ்வேறு பொலிஸ் நிலையங்களுக்கு நேற்று திங்கட்கிழமை (24) இரண்டு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலேயே முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவரின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் சமூக ஊடகங்களில் காணொளிகளை பதிவிட்டுள்ளதாக பொலன்னறுவை - சிறிபுர பொலிஸ் நிலையத்திற்கு நேற்றைய தினம் முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.
மேலும், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவருக்கு சார்பாக பெரிய கட்டவுட் ஒன்று வைக்கப்பட்டுள்ளதாக மாத்தளை - மஹவெல பொலிஸ் நிலையத்திற்கு நேற்றைய தினம் முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM