சர்வதேச சட்டங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை இஸ்ரேல் தொடர்ச்சியாக மீறுவதை கடுமையாகக் கண்டிப்பதாக சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பாலஸ்தீனர்களை காசா பகுதியிலிருந்து இடம்பெயரச் செய்வதற்காக ஒரு அமைப்பை உருவாக்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அதிகாரிகளின் நடவடிக்கையையும், மேற்கு கரையில் உள்ள 13 சட்டவிரோத குடியேற்றப் பகுதிகளுக்கான பதிவை அனுமதித்து அவற்றை நீட்சி குடியேற்றங்களாக சட்டபூர்வமாக்குவதற்கான முயற்சியையும் சவுதி கண்டிக்கின்றது.
சர்வதேச சட்டங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை இஸ்ரேல் தொடர்ச்சியாக மீறுவதற்கு எதிர்ப்பை வெளியிடுகின்றது.
சட்டப்பூர்வமான உரிமைகளை சர்வதேச தீர்மானங்களுக்கு ஏற்ப பாலஸ்தீனர்கள் பெறுவதை இல்லாமல் செய்வதால், நீதியான சமாதானம் ஏற்படாது.
மேலும், 1967 எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு கிழக்கு ஜெருசலத்தைத் தலைநகராகக் கொண்டு ஒரு சுயாட்சி பெற்ற பாலஸ்தீன் அரசை அமைப்பதன் அவசியத்தையும் சவுதி உறுதிப்படுத்துகிறது என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM