சாம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இதில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 338 ஓட்டங்களை பெற்று இந்தியாவிற்கு 339 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.

இதனையடுத்து வெற்றியிலக்கை நோக்கி களமிறக்கியது இந்திய அணியின் தொடக்கவீரர்களாக ரோஹித் ஷர்மாவும், ஷிகர் தவானும் களம் இறங்கினர்.

பாகிஸ்தான் அணியின் முதல் ஓவரை இளம் வேகப்புயல் அமிர் வீசினார். அந்த ஓவரில் முதல் இரண்டு பந்துகளில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் இருந்த ரோஹித் ஷர்மா மூன்றாவது பந்தில் எல்பிடபுள்யூ முறையில் தனது விக்கெட்டை பறிகொடுத்து ஓட்டம் எதுவும் பெறாமலே களத்தினை விட்டு வெளியேறினார்.

இதனையடுத்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான அணித்தலைவர் விராட் கோலி களத்தில் இறங்கினார். ஆனால் அவரும் யாரும் எதிர்பாராத விதமாக ஆட்டமிழக்க இந்திய ரசிகர்களுக்கு மேலும் அதிச்சி அளித்தார். இவரது விக்கெட்டையும் அமிர் தான் கைப்பற்றினார்.

தற்போது யுவராஜ் சிங் களமிறங்கியுள்ளார். இந்திய அணி தற்போது வரை 8 ஓவர் முடிந்துள்ள நிலையில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்து 31 ஓட்டங்கள் எடுத்து விளையாடி வருகிறது.