யாழ்ப்பாணத்தில் மின் கம்பத்தில் சிறுமியை கட்டி வைத்து தாக்கி, சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை கைது செய்வதற்கு மருதங்கேணி பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
குடத்தனை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டுக்கு அருகில் உள்ள கடையில் பொருட்களை வாங்க சென்ற சமயம், கடையில் இனிப்பு பொருட்களை திருடினார் என கடை உரிமையாளரான பெண், சிறுமியை மின் கம்பத்தில் கட்டி வைத்து, தாக்கி சித்திரவதை செய்துள்ளார்.
பின்னர், சிறுமி காயங்களுடன் வீட்டுக்குச் சென்ற நிலையில், வீட்டார் சிறுமியை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சிகிச்சையை தொடர்ந்து, சட்ட வைத்திய அதிகாரி சிறுமியை சோதனை செய்த போது, சிறுமியின் உடலில் அடிகாயங்கள் இருந்ததுடன், சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டமைக்கான காயங்களும் காணப்பட்டுள்ளன.
அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு சட்ட வைத்திய அதிகாரி அறிவுறுத்தியதை அடுத்து, தாக்குதலாளியான கடை உரிமையாளரான பெண்ணை கைது செய்வதற்கு பொலிஸார் அவரது வீட்டுக்கு சென்ற சமயம், அவர் தலைமறைவாகியுள்ளார். அவரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM