சம்மாந்துறையில் மனித பாவனைக்குதவாத குளிர்பானம் கைப்பற்றல் - 20 ஆயிரம் ரூபா அபராதம்!

25 Mar, 2025 | 11:18 AM
image

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட சம்மாந்துறை 01 பகுதியில் மனித பாவனைக்கு தீங்கு விளைவிக்கும் குளிர்பானங்கள் இருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து அவை சுகாதார வைத்திய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த தகவலுக்கு அமைய சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம். நௌசாத்தின் ஆலோசனையின் பேரில் சம்மாந்துறை 01 பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் டி. தினேஸினால் குறித்த குளிர்பானம் கைப்பற்றப்பட்டு அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அரச பகுப்பாய்வு திணைக்களத்தினால் குளிர்பானம் தொடர்பான அறிக்கையில் அனுமதிக்கப்படாத நிறமூட்டியினையும் ( Tartrazine - INS 102), அனுமதிக்கப்படாத பாதுகாக்கும் இரசாயனத்தையும் (Benzoic acid) கொண்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, சம்மாந்துறை நீதிவான் முன்னிலையில் குளிர்பானத்தை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கும் அதனை உற்பத்தி செய்தவரையும் முன்னிலைப்படுத்திய போது இருவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு ரூபா 20 ஆயிரம் ரூபா அபராதம் அறவிடப்பட்டது.

மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.என்.எம். பைலான் தலைமையிலான குழுவினர் இச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டொன் பிரியசாத் உயிரிழக்கவில்லை என்கிறார் பொலிஸ்...

2025-04-22 23:28:46
news-image

தபால் மூல வாக்களிப்பின் போது அரச...

2025-04-22 20:33:09
news-image

பொருளாதார முகாமைத்துவத்துக்கு அமைச்சரவையால் விசேட குழு...

2025-04-22 17:33:04
news-image

டொன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் காயம்!

2025-04-22 21:53:35
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும்...

2025-04-22 17:23:42
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் ஊழல், மோசடிகளுக்கு ஒருபோதும்...

2025-04-22 17:27:08
news-image

மாத்தறை சிறையில் குழப்பம் : அதிகாரிகள்...

2025-04-22 21:21:49
news-image

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2025-04-22 21:37:42
news-image

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-04-22 20:39:13
news-image

யாழ் . மாநகர சபையில் யாருக்கு...

2025-04-22 17:17:05
news-image

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட மகனை பார்க்கசென்ற தமிழ்...

2025-04-22 20:04:55
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான பேராயரின்...

2025-04-22 17:25:48