யாழில் ஏ.ரி.எம். அட்டையைத் திருடி மதுபானம் கொள்வனவு : பெண் உட்பட நால்வர் விளக்கமறியலில்!

25 Mar, 2025 | 11:12 AM
image

வீடான்றில் இருந்து 95 ஆயிரம் ரூபா மற்றும் தன்னியக்க பணப்பரிமாற்ற அட்டை என்பவற்றைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் உட்பட நால்வர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை எதிர்வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற கிராம அலுவலர் ஒருவரின் வீட்டிலேயே இந்தத் திருட்டு நடைபெற்றுள்ளது. இது தொடர்பில் அவர் கோப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். விசாரணைகளின் அடிப்படையில் அந்த வீட்டில் பணிபுரிந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தொடர் விசாரணைகளிலும், பாதுகாப்புக் கெமராப் பதிவுகளின் அடிப்படையிலும் இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் கைதுசெய்யப்பட்ட மூவரும் திருடப்பட்ட தன்னியக்கப் பணப்பரி மாற்ற அட்டையைக் கொண்டு 20 ஆயிரம் ரூபாவை எடுத்து மதுபானம் கொள்வனவு செய்துள்ளமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கோப்பாய் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உடல்நிலை மோசம்; உயில் எழுதத் தயார்:...

2026-06-08 17:25:22
news-image

டொலர் உயர்வால் மக்கள் மீதே கடன்...

2026-06-08 20:38:26
news-image

செம்மணி புதைகுழி அகழ்வில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள்...

2026-06-08 19:24:40
news-image

விகாரையிலிருந்து திருடப்பட்ட புராதன புத்தர் சிலையுடன்...

2026-06-08 18:28:03
news-image

மூன்று நாட்கள் விசேட டெங்கு ஒழிப்பு...

2026-06-08 18:31:32
news-image

உயிர்த்த ஞாயிறு விசாரணைக்கு கம்மன்பில, விமல்,...

2026-06-08 18:16:45
news-image

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 3...

2026-06-08 17:41:30
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராகவும் பாடகர்...

2026-06-08 17:26:31
news-image

அரசாங்கம் கோப்புகளை மூடி மறைக்கிறது: புலனாய்வு...

2026-06-08 17:25:46
news-image

கலால் வரி ஆணையாளருக்கு எதிராக ராஜகிரியவில்...

2026-06-08 16:58:43
news-image

இலங்கையில் தடையை மீறி மின்-சிகரெட்டுகள் விற்கப்படுகிறது...

2026-06-08 17:03:05
news-image

25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பெண்...

2026-06-08 16:57:39