ஐ.தே.க.வுக்கு வைத்த பொறியில் ஜே.வி.பி. சிக்கிக் கொண்டது ;பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி

24 Mar, 2025 | 07:10 PM
image

(எம்.மனோசித்ரா)

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையைக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சியை இலக்கு வைக்க ஜே.வி.பி. திட்டமிட்டது. ஆனால் தற்போது அந்த பொறியில் ஜே.வி.பி.யே சிக்கிக் கொண்டது. இந்த அறிக்கையைக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த தேர்தல்களில் பெற்றுக் கொண்ட வெற்றியை உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் தக்க வைத்துக் கொள்வதற்காக அரசாங்கம் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது.

அன்று வழங்கிய வாக்குறுதிகளே இன்னும் நிறைவேற்றப்படாமலுள்ள நிலையில் தற்போது இந்தத் தேர்தலை இலக்காகக் கொண்டு மீண்டும் பொய்களை கட்டவிழ்த்து விடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

உள்ளுராட்சிமன்றங்களை கைப்பற்றாவிட்டால் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும், மத்திய வங்கி பிணைமுறி கொள்ளையர்களை கைது செய்ய முடியாது என்றும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். 

நாட்டு மக்கள் அந்தளவுக்கு முட்டாள்களா? நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்கள் பாராளுமன்றத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்படுகின்றன. மாறாக பிரதேசசபைகளின் ஊடாக அல்ல.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தால் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்ததை ஏற்றுக் கொண்டு, ஏமாறுமளவுக்கு மக்கள் முட்டாள்கள் அல்ல என்பதை இந்த அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த தேர்தலில் அரசாங்கத்துக்கு மக்கள் சிறந்த பாடத்தைக் கற்றுக் கொடுப்பார்கள்.

159 தேசிய மக்கள் சக்தியின் ஆசனங்களால் பாராளுமன்றம் நிரப்பப்பட்டுள்ளது. அவ்வாறு மக்கள் ஆணையை வழங்கியும் இந்த அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லை. 

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையைக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சியை இலக்கு வைக்க ஜே.வி.பி. திட்டமிட்டது. ஆனால் தற்போது அந்த பொறியில் ஜே.வி.பி.யே சிக்கிக் கொண்டது.

1980களில் ஜே.வி.பி. செய்த மனிதப் படுகொலைகள், ஏற்படுத்திய கலவரங்கள் இன்று பேசுபொருளாகியுள்ளன. இதனால் கடந்த தேர்தல்களில் இவர்களுக்கு வாக்களித்த மக்கள் தமது தீர்மானத்தை மாற்றிக் கொண்டுள்ளனர். 

எனவே பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையைக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இவர்களால் எதுவும் செய்ய முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-04-30 06:10:53
news-image

யாழில். 500 கிலோ மஞ்சளுடன் ஒருவர்...

2025-04-30 02:57:51
news-image

மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர்...

2025-04-30 01:48:14
news-image

மே தினத்தன்று பிரதான அரசியல் கட்சிகள்...

2025-04-29 21:29:39
news-image

குழந்தைகளின் மரணங்கள் குறித்த பிரேத பரிசோதனை...

2025-04-29 17:31:04
news-image

மின்சார செலவுகள் மற்றும் விலை நிர்ணயம்...

2025-04-30 02:54:21
news-image

ரணிலின் சமூக வலைத்தளங்களிலிருந்தே ஜனாதிபதி தகவல்களைப்...

2025-04-29 17:24:41
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு...

2025-04-29 19:00:38
news-image

வடக்கு கரையோர பிரதேசங்களில்  போதைப்பொருள் பாவனை...

2025-04-29 21:18:09
news-image

கொழும்பை சுத்தமான நவீன நகரமாக மாற்றுவோம்...

2025-04-29 21:24:23
news-image

கடந்த தேர்தல்களில் அசெளகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றை...

2025-04-29 17:33:26
news-image

வில்பத்து தேசிய பூங்காவில் ஆமைகளை பிடிக்க...

2025-04-29 17:16:00