சர்க்கரை வள்ளி கிழங்கு லட்டு செய்வது எப்படி?

24 Mar, 2025 | 07:14 PM
image

சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ, சி, பி,  இரும்புச்சத்து, கல்சியம் மற்றும் செலினியம் போன்ற பல ஊட்டச்சத்துகள் உள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், புற்றுநோய் பாதிப்பை குறைக்கவும், சருமத்தை மேம்படுத்தவும் இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு உதவுகிறது.

பெரும்பாலான குழந்தைகள் சர்க்கரை வள்ளி கிழங்கை உண்பதற்கு விரும்புவதில்லை. 

இவ்வாறு சர்க்கரை வள்ளி கிழங்கில் லட்டு செய்து கொடுத்தால் குழந்தைகள் அதனை விரும்பி உண்பார்கள். 

சர்க்கரை வள்ளி கிழங்கு லட்டு செய்வதற்கு தேவையான பொருட்கள் ; 

  • 1/2 கப் சர்க்கரை வள்ளி கிழங்கு 
  • 1/4 கப் திருவிய தேங்காய் 
  • சிறிதளவு சர்க்கரை
  • 10 கிராம் முந்திரிப்பருப்பு
  • 3 தேக்கரண்டி நெய்
  • 2 ஏலக்காய்

செய்முறை ; 

சர்க்கரை வள்ளி கிழங்கை ஏலக்காய் கலந்த தண்ணீரில் வேக வைத்து பின்னர் அதன் தோலை உரித்து எடுக்கவும்.

பின்னர் திருவிய தேங்காய்,  சர்க்கரை, முந்திரிப்பருப்பு, நெய், சர்க்கரை வள்ளி கிழங்கு ஆகியவற்றை பாத்திரமொன்றில் இட்டு பிசைத்து உருண்டையாக பிடித்து எடுக்கவும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right