ஆர்.ராம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதக் கூட்டத்தொடரின்போது பிரித்தானியாவால் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அந்நாட்டுப் உயர் பிரதிநிதியிடத்தில் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளதாக உயர்மட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த தகவல்களின் அடிப்படையில்,
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்தோ-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மெல்லருக்கும், இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டக்குழுவினருக்கும் இடையிலான உள்ளகச் சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்போது, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் 'இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் புதிய பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு இணை அனுசரணை நாடுகளின் பிரதானியான பிரித்தானியா தீர்மானித்துள்ளமையை அந்நாட்டு பிரதிநிதியான பென் மெல்லர் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் குறித்த தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு வழங்குதல் மற்றும் ஆதரவளித்தல் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடுகளையும் அவர் கோரியுள்ளார்.
இதன்போது, இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டக்குழுவினரால் இலங்கை இறைமையுள்ள நாடு என்ற வகையில் வெளிநாடுகளினால் முன்மொழியப்படுகின்ற தீர்மானத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அந்த வகையில் பிரித்தானியா தலைமையில் கொண்டுவரவுள்ள புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நேரடியாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போதைய அரசாங்கமானது 'உள்நாட்டு தேசிய பொறிமுறையை' முன்னெடுப்பதில் அர்ப்பணிப்பைக் கொண்டிருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகளை பொருளாதார நெருக்கடிகள் குறைந்தவுடன் முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த சந்திப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் யார்யார் பங்கேற்றார்கள் என்பது குறித்தும் உரையாப்பட்ட விடயங்கள் குறித்து வெளிப்படுத்துவதற்கு அரசாங்கத்தரப்பினர் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM