புதுமுக நடிகர் தேவ் காதல் நாயகனாக நடித்திருக்கும் 'யோலோ' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஐ அம் ஃபிரம் உளுந்தூர்பேட்டை' எனும் முதல் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழில் நட்சத்திர நடிகரான அதர்வா அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அத்துடன் படக்குழுவினர் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் இப்பாடலுக்கான காணொளி மற்றும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.
அறிமுக இயக்குநர் எஸ்.சாம் இயக்கத்தில் உருவாகியுள்ள ' யோலோ' எனும் திரைப்படத்தில் தேவ், தேவிகா, 'படவா' கோபி, பிரவீன், சுவாதி நாயர், ஆகாஷ், பிரேம், நித்தி பிரதீப் , யுவராஜ், திவாகர், வி ஜெ நிக்கி ,தீபிகா, சுப்பு , பூஜா, பியா, விக்னேஷ், சுபா கண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சகிஷ்னா சேவியர் இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எம் ஆர் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேஷ் செல்வராஜ் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் 'ஐ அம் ஃபிரம் உளுந்தூர்பேட்டை..' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் சகிஷ்னா சேவியர் எழுத, பின்னணி பாடகர் ஆதித்யா ஆர்கே பாடி இருக்கிறார். இந்த பாடல் மேலத்தேய தாளகதியில் அமைந்திருப்பதாலும், இளமை ததும்பும் இன்றைய இளம் ரசிகர்களின் எண்ணத்தை பகிர்ந்து கொள்வது போல் பாடல் வரிகள் உள்ளதாலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''நாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு சம்பவம் வாழ்வில் நடைபெற்றால் எப்படி இருக்கும்? என்ற ஃபேண்டஸியான கற்பனை தான் இப்படத்தின் மையப்புள்ளி. காதலை நகைச்சுவையுடன் பொழுதுபோக்காக சொல்லி இருக்கிறோம்'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM