'நரி வேட்டை' படத்தில் நடிக்கும் சேரனின் கதாபாத்திர தோற்றப் பார்வை வெளியீடு

24 Mar, 2025 | 05:46 PM
image

இயக்குநரும் நடிகருமான சேரன் அழுத்தமான வேடத்தில் நடித்து வரும் 'நரி வேட்டை' எனும் திரைப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் அதற்குரிய தோற்றப் பார்வையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் அனு ராஜ் மனோகர் இயக்கத்தில் உருவாகி வரும் ' நரி வேட்டை ' எனும் திரைப்படத்தில் டொவினோ தோமஸ், சுராஜ் வெஞ்சரமூடு முதன்மையான வேடத்தில் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் இயக்குநரும் நடிகருமான சேரன் இணைந்திருக்கிறார். விஜய் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். கிரைம் வித் இன்வெஸ்டிகேட்டட் திரில்லர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை இந்தியன் சினிமா கம்பனி எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் திப்பு ஷான் மற்றும் சியாஸ் ஹாசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்களின் கதாபாத்திர தோற்றப் பார்வையை படக்குழுவினர் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சேரன் இந்த திரைப்படத்தில் ஆர் .கேசவதாஸ் எனும் பெயருடைய காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ளனர். தமிழ் மற்றும் மலையாள மொழியில் தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தைப் பற்றிய புதிய தகவல்களை படக் குழுவினர் தொடர்ந்து வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right