(செ.சுபதர்ஷனி)
களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலைக்காக இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம் கடந்த 6 வாரங்களாக சுங்க பிரிவில் விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்தார்.
மேற்படி விடயம் தொடர்பில் திங்கட்கிழமை (24) அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலைக்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ள சுமார் 1500 இலட்சம் ரூபா பெறுமதிமிக்க சிரி ஸ்கேன் இயந்திரம் கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தது.
எனினும் தற்போது 6 வாரங்கள் கடந்துள்ள நிலையில் இவ்வியந்திரம் சுங்கப் பிரிவிலிருந்து விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளும் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. bகுறித்த இயந்திரத்தை விடுவிக்க ஒரு மில்லியன் ரூபா சுங்கப்பிரிவுக்கு செலுத்தப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளால் கணக்கிடப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு இயந்திரத்தை கொள்வனவுக்கான விலைமனுக் கோரல் தொடர்பான ஆவணங்கள் உரிய நிறுவனத்திடம் கையளிக்கப்பட்ட போதும், பிற நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
எவ்வாறெனினும் நீண்ட காலத்திற்குப் பின்னர் அவ்வியந்திரம் நாட்டை வந்தடைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்த சிரி ஸ்கேன் இயந்திரம் செயலிழந்தது.
இன்றுவரை அவசர பரிசோதனைக்காக நோயாளர்கள் அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதுடன், ஏனைய நோயாளர்கள் ஹோமாகம, களுபோவில, ஹொரன உள்ளிட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இதனால் நோயாளர்களும் வைத்தியசாலை ஊழியர்களும் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதுடன். தனியார் மருத்துவமனையில் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக பெருமளவான தொகையை செலவிட வேண்டியுள்ளது.
அத்தோடு இது போன்ற உயர் தொழில்நுட்ப இயந்திரங்களை நீண்ட நாட்களுக்கு சுங்கப்பிரிவில் தடுத்து வைத்திருப்பதால் இயந்திரத்தின் பாகங்கள் சேதமடையக்கூடும்.
ஆகையால் இயந்திரத்தை உடனடியாக சுங்கப் பிரிவிலிருந்து விடுவித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM