இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையை மாற்றியமைக்கும் புதிய அறிமுகமாக Prime Group இனால் PrimeMax எனும் புத்தாக்கமான வீட்டு உரிமையாண்மை மற்றும் முதலீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சொத்து உரிமையாண்மையை எளிமைப்படுத்தி, நீண்ட கால சொத்து உருவாக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
PrimeMax இன் உத்தியோகபூர்வ அறிமுக நிகழ்வு கொழும்பு Shangri-La ஹோட்டலில் மார்ச் 16ஆம் திகதி நடைபெற்றது. இதில், தொழிற்துறை முன்னோடிகள், நிதிசார் நிபுணர்கள் மற்றும் வீட்டு உரிமையாளராவதில் ஆர்வம் கொண்டவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ரியல் எஸ்டேட் பெறுமதி சேர்ப்பை பயன்படுத்திக் கொள்வது தொடர்பில் முதலீட்டாளர்கள் பல மூலோபாய வழிமுறைகளை நாடியிருந்த போதிலும், பல வருடகாலமாக வீடொன்றை கொள்வனவு செய்வோர், அதனைத் தாங்கிக் கொள்வது தொடர்பான சவால்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.
ஒப்பற்ற 10% ஆரம்பக் கொடுப்பனவு மற்றும் 0.5% எனும் மாதாந்த தவணைக் கட்டணம் ஆகியவற்றுடன், PrimeMax இனால் பிரவேசத்துக்கான தடைகள் நீக்கப்படுவதுடன், சொத்துக்களின் பெறுமதி சேர்ப்பு ஏற்படும் நிலையில் நிதிசார் நெகிழ்ச்சித் தன்மையை வழங்கி, குறைந்த ஆரம்ப கட்ட அர்ப்பணிப்பு மற்றும் நீண்ட கால நிதிசார் வருமதிகள் ஆகியவற்றை அறிமுகம் செய்து, சந்தையை மாற்றியமைக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
இதனூடாக, இலங்கையின் மிகவும் இலகுவாக அணுகக்கூடிய மற்றும் மூலோபாய ரியல் எஸ்டேட் தீர்வாக PrimeMax அமைந்திருப்பதுடன், தமது முதலாவது இல்லத்தை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு அல்லது தமது ரியல் எஸ்டேட் இருப்பை விரிவாக்கம் செய்து கொள்ள எதிர்பார்ப்போர் மற்றும் நீண்ட கால அடிப்படையில் பெறுமதி அதிகரிப்பை எதிர்பார்க்கும் அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்களுக்கும் சிறந்த தீர்வாகவும் அமைந்திருக்கும்.
Prime Group இன் இணை-தவிசாளர் பிரேமலால் பிராஹ்மனகே கருத்துத் தெரிவிக்கையில், “Prime Group இல், இடப் பகுதிகள் என்பதற்கு அப்பால் புத்தாக்கம் என்பதில் நாம் எப்போதும் நம்பிக்கை கொண்டிருந்தோம். PrimeMax உடன், நாம் வீடுகளை மாத்திரம் நிர்மாணிக்காமல், கனவுகளை நிறைவேற்றுவது மற்றும் இலங்கையர்களுக்கு சொத்தின் உரிமையாளர்களாக திகழ்வதற்கு ஸ்மார்ட்டான வழிமுறைகளை ஏற்படுத்தி, அவர்களின் நிதிசார் எதிர்காலத்தை மேம்படுத்திக் கொள்வதில் பங்களிப்பச் செய்கிறோம்.” என்றார்.
ரியல் எஸ்டேட் என்பது மிகவும் உறுதியான மற்றும் வெகுமதியளிக்கும் முதலீட்டு வழிமுறையாக அமைந்திருப்பதுடன், இலங்கையில் சொத்துகளின் விலைகள் தொடர்ச்சியாக உயர்வடைந்த வண்ணமுள்ளது. PrimeMax இனால் குறைந்தளவு ஆரம்ப முதலீட்டு மற்றும் நிலைபேறான மாதாந்த பங்களிப்புகளினூடாக சொத்தை கட்டியெழுப்பிக் கொள்ளும் மூலோபாய வழிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, மொத்தமான கொடுப்பனவுகள் அல்லது சிக்கல்கள் நிறைந்த ஆவணப்படுத்தல்கள் தேவைப்பாடுகளின்றி, வீட்டு உரிமையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஒப்பற்ற உரிமையாண்மை அனுபவம் சேர்க்கப்படுகிறது.
Prime Group இணை தலைமை அதிகாரி சந்தமினி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “வீட்டு உரிமையாண்மை மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடு என்பது ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்பதை நாம் புரிந்து கொண்டுள்ளோம். PrimeMax இனால் கொள்வனவாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் நிதிசார் பாதுகாப்பு, அனுகூலங்கள் மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட செயன்முறைகள் போன்றன உறுதி செய்யப்படுவதுடன், அவர்களின் செல்வத்தை சுலமாக கட்டியெழுப்பிக் கொள்ள முடியும்.” என்றார்.
Prime Group இனால் இலங்கையர்களுக்கு புதிய யுகத்தினுள் பிரவேசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதுடன் – நிதிசார் வரையறைகளினூடாக, எவருக்கும் தமது கனவுகளை பின்தள்ள வேண்டிய நிலையை இல்லாமல் செய்துள்ளது. PrimeMax உடன், உங்களின் கனவுகளை, செல்வத்தை மற்றும் எதிர்காலத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM