2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஒருவரின் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவில் பரிந்துரை

24 Mar, 2025 | 08:20 PM
image

இரண்டு புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஒருவரின் நியமனத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை (21) கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவின் பரிந்துரை வழங்கப்பட்டது. 

அத்துடன், ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் நியமனம் பற்றிய பரிந்துரைக்கும் குழு அனுமதி வழங்கியது.

அதற்கமைய, கியூபா குடியரசுக்கான இலங்கைத் தூதுவராக ரத்னாயக்க முதியன்சலாகே, மஹிந்த தாச ரத்னாயக்க பெயரையும், ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவராக பேராசிரியர் பிவித்துரு ஜனக் குமரசிங்க பெயரையும் உயர் பதவிகள் பற்றிய குழு பரிந்துரைத்துள்ளது. 

அத்துடன், ஐக்கிய இராச்சியம் மற்றும் வடஅயர்லாந்து ஆகிய நாடுகளுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக சேனாதீர துமுன்னகே நிமல் உபாலி சேனாதீர பெயரை உயர் பதவிகள் பற்றிய குழு பரிந்துரைத்துள்ளது.

மேலும், ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக முன்னாள் பிரதம நீதியரசர் ஜயந்த சந்திரசிறி ஜயசூரிய பெயரையும் குழு பரிந்துரைத்துள்ளது. 

பிரதமர் ஹரினி அமரசூரிய  தலைமையில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்தில், அமைச்சர்களான பிமல் ரத்னாயக்க, குமார ஜயக்கொடி, அனில் ஜயந்த, ஹினிதும சுனில் செனவி,  பிரதியமைச்சர்  ஹன்சக விஜேமுனி, பாராளுமன்ற உறுப்பினர்களான  தயாசிறி ஜயசேகர,   சமிந்திரானி கிரிஎல்லே ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்பு சட்டம்...

2025-04-30 17:52:20
news-image

எரிபொருள் விலைகளில் திருத்தம் !

2025-04-30 20:39:27
news-image

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லையாம் !

2025-04-30 20:27:40
news-image

இலங்கை - பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு...

2025-04-30 17:50:20
news-image

வாக்காளர் அட்டைகள் கடைகளில் மீட்பு ;...

2025-04-30 17:34:40
news-image

வெள்ளவத்தை பொதுச்சந்தை பகுதியில் தேசிய மக்கள்...

2025-04-30 18:06:00
news-image

கண்டி - கம்பளை பிரதான வீதியில்...

2025-04-30 17:28:22
news-image

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைகளை...

2025-04-30 17:38:11
news-image

தொழிற்சங்க நடவடிக்கை முன்னேடுக்க தயாராகும் தெல்லிப்பளை...

2025-04-30 17:13:54
news-image

டெங்கு நோயால் 6 பேர் உயிரிழப்பு 

2025-04-30 17:13:07
news-image

பாதுகாப்பு செயலாளர் - பாகிஸ்தான் இராணுவத்...

2025-04-30 17:01:17
news-image

மயிலத்தமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு நீதி கோரி...

2025-04-30 18:23:51