(ந.ஜெகதீஸ்)

நல்லாட்சி அரசாங்கம் நிறுவப்பட்டதன் பின்னர் நாட்டில் சகல துறைகளிலும் முன்னேற்றம் கண்டிருப்பதை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையினூடாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது என காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் இணக்கப்பாட்டுடனான அரசியலின் மூலம் ஏனைய நாடுகளுடன் கொண்டுள்ள நட்புறவினாலேயே குறித்த வெற்றியினை எமக்கு பெற முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.