(எம்.மனோசித்ரா)
மின்சார சட்ட திருத்தம் தொடர்பில் நிதி அமைச்சிற்கும் மின்சக்தி அமைச்சிற்குமிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. மின்சக்தித் துறை மறுசீரமைப்பு நாட்டுக்கு தகுந்த வகையில் இடம்பெற வேண்டும். ஆனால் அரசாங்கம் பழைய பாதையிலேயே பயணிக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
களுத்துறை பிரதேசத்தில் திங்கட்கிழமை (24) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மின்சார சட்ட திருத்தம் தொடர்பில் நிதி அமைச்சிற்கும் மின்சக்தி அமைச்சிற்குமிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
ஜனாதிபதித் தேர்தலின் போது ஒரு விடயத்தையும் தற்போது இன்னொரு விடயத்தையும் கூறுகின்றனர். நாட்டின் மின்சக்தி துறை மறுசீரமைக்கப்பட வேண்டும்.
இத்துறையில் தேசிய மற்றும் சர்வதேச முதலீடுகள் ஈர்க்கப்பட வேண்டும். அரசாங்கத்தால் மாத்திரம் இத்துறையை நவீனமயப்படுத்த முடியாது.
மின்சாரத்துறை நவீனமயப்படுத்தல் நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் அமைய வேண்டும். ஊழியர்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அரச சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மறுசீரமைப்பின் போது இந்த விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அதனை விடுத்து மீண்டும் பழைய நிலைமைக்கே செல்லக் கூடாது. ஆனால் அரசாங்கம் பழைய பாதையிலேயே திரும்ப பயணிக்கின்றது.
அதானி நிறுவனத்தின் காற்றாலை மின்உற்பத்தி திட்டம் ஊழல் நிறைந்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. விலைமனு கோரப்பட வேண்டும் என்று நாட்டில் சட்டம் காணப்படும் நிலையில், விலைமனு கோரல் இன்றி அந்த நிறுவனத்துக்கு இந்த திட்டம் வழங்கப்பட்டுள்ளமை தவறாகும்.
இந்த திட்டத்திலிருந்து அதானி விலகினாலும், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி திட்டத்திலிருந்து விலகவில்லை.
இவ்வாறு அதானி நிறுவனத்தைத் தவிர வேறு எந்த வெளிநாட்டு முதலீட்டாளர்களும் நாட்டுக்கு வரவில்லை. கடந்த காலங்களில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்தவர்களே இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருக்கின்றனர்.
கடந்த தேர்தல்களில் பொதுஜன பெரமுன வேட்பாளர்களை களமிறக்கவில்லை. ஆனால் இம்முறை அவ்வாறல்ல. அவர்களது வாக்குகள் மீண்டும் அவர்களுக்கே கிடைக்கப் பெறும்.
அந்த வகையில் இம்முறை பொதுஜன பெரமுன சுமார் 15 சதவீத வாக்குகளையேனும் பெற்றுக் கொண்டால், தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளில் அது குறைவடையும். அதேவேளை எமது வாக்குகளில் ஒன்று கூட பொதுஜன பெரமுனவுக்கு கிடைக்காது.
அந்த வகையில் நாம் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு சிறப்பாக தயாராகி வருகின்றோம். ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களை விட இம்முறை தேர்தலில் சிறந்த வெற்றியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM