யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் 95ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஏ.ரி.எம் அட்டைகளை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் பணம் மற்றும் ஏ.ரி.எம் அட்டைகள் திருடப்பட்டமை தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், வீட்டின் பாதுகாப்பு கமராக்களை சோதனை செய்ததன் அடிப்படையில் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.
விசாரணையில் குறித்த பணிப்பெண்ணும் மூன்று ஆண்களும் இணைந்து இந்த வீட்டில் திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், திருடிய பணத்தில் 20 ஆயிரம் ரூபாய்க்கு மதுபானம் வாங்கி அருந்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் நால்வரும் யாழ் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM