உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் ; வர்த்தகருக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஒத்திவைப்பு

24 Mar, 2025 | 04:18 PM
image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய இரு தற்கொலை குண்டுதாரிகள் தொடர்பான தகவல்களை மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வர்த்தகர் மொஹமட் இப்ராஹிமுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 02 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (24) உத்தரவிட்டள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய இரு தற்கொலை குண்டுதாரிகள் தொடர்பான தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து மறைத்ததாக குற்றம் சாட்டி கொழும்பு, தெமட்டகொடை மஹவில பகுதியில் வசிக்கும் வர்த்தகர் மொஹமட் இப்ராஹிம் மற்றும் அவரது இரண்டு மகன்களுக்கு  எதிராக சட்டமா அதிபரால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது , இந்த வழக்கின் இரண்டாவது சாட்சியாளரான குறித்த வர்த்தகரின் வீட்டில் பணிபுரியும் பெண் வெளிநாடு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதேவேளை, மற்றுமொரு சாட்சியாளரும் வெளிநாடு செல்ல இருப்பதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்ட நீதவான், வெளிநாடு சென்ற சாட்சியாளருக்கு புதிய அழைப்பாணையை பிறப்பிக்க உத்தரவிட்டதுடன்,  குறித்த சாட்சியாளரின் வெளிநாட்டு பயணம் தொடர்பான அறிக்கையை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இருந்து பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டொன் பிரியசாத் உயிரிழக்கவில்லை என்கிறார் பொலிஸ்...

2025-04-22 23:28:46
news-image

தபால் மூல வாக்களிப்பின் போது அரச...

2025-04-22 20:33:09
news-image

பொருளாதார முகாமைத்துவத்துக்கு அமைச்சரவையால் விசேட குழு...

2025-04-22 17:33:04
news-image

டொன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் காயம்!

2025-04-22 21:53:35
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும்...

2025-04-22 17:23:42
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் ஊழல், மோசடிகளுக்கு ஒருபோதும்...

2025-04-22 17:27:08
news-image

மாத்தறை சிறையில் குழப்பம் : அதிகாரிகள்...

2025-04-22 21:21:49
news-image

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2025-04-22 21:37:42
news-image

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-04-22 20:39:13
news-image

யாழ் . மாநகர சபையில் யாருக்கு...

2025-04-22 17:17:05
news-image

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட மகனை பார்க்கசென்ற தமிழ்...

2025-04-22 20:04:55
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான பேராயரின்...

2025-04-22 17:25:48