கிழக்கு மாகாண பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் மட்டக்களப்பு கொழும்பு இடையிலான புகையிரத சேவை அட்டவணைகளில் நேர மாற்றம் மாற்றப்பட்டுள்ளது.
கிழக்கு மார்க்கத்திற்கான ரயில் சேவைகளில் தொடர்ச்சியாக காட்டு யானைகள் விபத்துக்குள்ளாகி வருவதனை தடுக்கும் நோக்கில் கடந்த 7 திகதி முதல் நேர மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
காட்டு யானைகள் பாதுகாக்கப்படுகின்ற அதே வேளை கூடுதலான நேரம் இந்தப் பயணத்தின் போது காணப்படுகின்ற விடயங்களையும் பொதுமக்களின் சிரமங்களையும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரன் கவனத்திற்கு கொண்டு வந்ததனர்.
அடுத்து கிழக்கு மாகாண பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் மட்டக்களப்பு கொழும்பு இடையிலான ரயில் சேவை அட்டவணைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நேர மாற்றமானது இன்று திங்கட்கிழமை (24) முதல் புதிய நேர அட்டவணையின் படி புகையிரத பயணங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், மட்டக்களப்பிலிருந்து அதிகாலை 01.30இற்கு புறப்படும் புலதிசி ரயில் காலை 09.01மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும். கொழும்பிலிருந்து மாலை 03.15 இற்கு புறப்படும் புலதிசி ரயில் இரவு 10.38 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும்.
மட்டக்களப்பிலிருந்து இரவு 07.40 இற்கு புறப்படும் மீனகயா ரயில் அதிகாலை 04.16 மணிக்கு கொழும்பு சென்றடையும். கொழும்பிலிருந்து இரவு 11.00 இற்குபுறப்படும் மீனகயா ரயி்ல் காலை 06.45 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும்.
மட்டக்களப்பிலிருந்து காலை 06.10 இற்கு புறப்படும் உதயதேவி ரயில் மாலை 03.00 மணிக்கு கொழும்பு சென்றடையும். கொழும்பிலிருந்து காலை 06.05 இற்கு புறப்படும் உதயதேவி ரயில் மாலை 03.00 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும்.
புலதிசி,மீனகயா ரயில்களின் First class AC(AFC), Third class reserved (TCR) மாத்திரமே booking செய்து கொள்ள முடியும் எனவும் உதயதேவி ரயிலின் 2nd class மாத்திரமே booking செய்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM