துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனின் அரசியல் எதிராளியும் இஸ்தான்புலின் மேயருமான எக்ரம் இமாமொக்லு கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை துருக்கி அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதை தொடர்ந்து அந்த நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.
2028 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான குடியரசு மக்கள் கட்சியின் நியமனத்தை அவர் பெற்றுள்ள நிலையிலேயே அவர் உத்தியோகபூர்வமாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இஸ்தான்புல் மேயரை கைதுசெய்துள்ள அதிகாரிகள் அவருக்கு எதிராக குற்றவியல் அமைப்பொன்றை உருவாக்கி வழிநடத்தியது,இலஞ்சம் வாங்கியது,கப்பம் பெற்றது போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
கடந்த வருடம் இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலின் போது இடதுசாரி அரசியல் கூட்டமைப்பிற்கு ஆதரவளித்தன் மூலம் அவர் ஆயுதமேந்திய பயங்கரவாத குழுவிற்கு ஆதரவளித்தார் என அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இமாமொல்லு சிலிவ்ரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.அவர் மேயர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் என உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை என எக்ரெம் இமாமொல்லு தெரிவித்துள்ளார்.
நான் ஒருபோதும் அடிபணிய மாட்டேன் என கைதுசெய்யப்படுவதற்கு முன்னர் அவர் சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தனது கைது துருக்கியின் ஜனநாயகத்தின் மீதான கறை என தெரிவித்துள்ள அவர் நீதி நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
துருக்கி தலைநகர் இஸ்தான்புலில் நகரமண்டபத்திற்கு அருகே ஐந்தாவது நாளாக கூடிய பெருமளவு மக்கள் துருக்கியின் தேசிய கொடியுடன் பேராட்டங்களில் ஈடுபட்டனர்.
கலகமடக்கும் பொலிஸாருக்கு முன்னாள் அவர்கள் ஆர்ப்பாட்;டங்களை மேற்கொண்டனர்.பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தில் ஈடுபடுவதையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பெப்பர் ஸ்பிரேயினை பயன்படுத்துவதையும் காணமுடிந்தது.
இஸ்தான்புல் நகரமண்டபத்திற்கு காணப்பட்ட பெருமளவு மக்கள் முன்னிலையில் உரையாற்றிய கைதுசெய்யப்பட்டுள்ள மேயரின் மனைவி தனது கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதி அனைவரினதும் மனச்சாட்சியை உலுக்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
எக்ரமுக்கு இழைக்கப்பட்ட அநீதி போன்று தங்களிற்கு எதிராகவும் அநீதி இழைக்கப்பட்டதாக ஒவ்வொருவரும் கருதுகின்றனர், என தெரிவித்துள்ள அவர் அவர் உங்களை தோற்கடிப்பார் நீங்கள் தோல்வியடைவீர்கள் என தெரிவித்துள்ளார்.
2013 இல் உள்ளுர் பூங்கா அழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற ஜெசி ஆர்ப்பாட்டத்தின் பின்னர் துருக்கி சந்தித்துள்ள மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஐந்து நாட்களாக துருக்கியின் 88 மாகாணங்களில் 55 மாகாணங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக ஏஎவ்பி தெரிவித்துள்ளது.
துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் இந்த ஆர்ப்பாட்டங்களை கண்டித்துள்ளதுடன் இது அமைதியை குலைக்கும்மக்களை துருவமயப்படுத்தும் என தெரிவித்துள்ளார்
விசாரணையொன்றின் ஒரு பகுதியாக இதுவரை 100க்கும் அதிகமான அரசியல்வாதிகள் பத்திரிகையாளர்கள் வர்த்தகர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM