உலக காசநோய் தினத்தை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வு கருத்தரங்கு

24 Mar, 2025 | 02:05 PM
image

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கொன்று கல்முனை பிராந்திய மார்பு நோய் சிகிச்சை நிலையத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (24) காலை நடைபெற்றது.

கல்முனை பிராந்திய மார்பு நோய் சிகிச்சைப் பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல். அப்துல் கபூர் தலைமையில் இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டது.

பிராந்திய மார்பு நோய் சிகிச்சை நிலையத்தின் வெளிச்சுவரில் காசநோய் விழிப்புணர்வு ஓவியம் வரைவதற்கு அனுசரணை வழங்கிய அனுசரணையாளர்களுக்கு கருத்தரங்கு நிகழ்வின்போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

மேலும், சிகிச்சை நிலையத்தின் வெளிச்சுவரில் கையெழுத்திடும் பலகை திறந்துவைக்கப்பட்டது. அதில் அதிதிகள் மற்றும் ஏனையவர்கள் கையெழுத்திட்டனர்.

இதன்போது கல்முனை பிராந்திய மார்பு நோய் சிகிச்சைப் பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல். அப்துல் கபூர் கூறுகையில், 

காசநோய் ஒரு காலத்தில் அதிகமான உயிரிழப்புக்களை ஏற்படுத்தி இருந்தது. அன்று முதல் இன்று வரை உலகளவில் ஒரு பாரிய தாக்கத்தை இந்நோய் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

தெற்காசிய நாடுகளில் இலங்கையில் குறைந்தளவு காசநோயாளர்கள் இருக்கின்றபோதிலும், உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலுக்கு அமைய, இலங்கையில் 14 ஆயிரம் காசநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்று வரை இந்த எண்ணிக்கையிலான காசநோயாளர்களை அடையாளம் காண முடியாதுள்ளது. 

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான நோயாளர்களே அடையாளம் காணப்படுகின்றனர். 

2024ஆம் ஆண்டில் 9,180 காசநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதேவேளை, நான்காயிரம் முதல் ஐயாயிரம் வரையான நோயாளர்கள் அடையாளம் காணப்படாமல் சமூகத்தில் உலாவிக்கொண்டிருக்கிறார்கள். இது காசநோய் நிலைமையை சமூகத்தில் மேலும் அதிகப்படுத்தும். அடையாளம் காணப்படாத காசநோயாளர்கள் 15 வரையிலான புது காசநோயாளர்களை உருவாக்குகின்றனர். இதனை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. 

கல்முனை பிராந்தியத்தை பொறுத்தவரையில் சுமார் 60 வீதமான காசநோயாளர்களையே அடையாளம் காணக்கூடியதாக இருக்கிறது என தெரிவித்தார். 

இந்த கருத்தரங்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸடீன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.முஹம்மது ஹனீபா, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் டி.பிரபாசங்கர், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.நௌசாத், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜி. சுகுனன், நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வாஜித், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டொன் பிரியசாத் உயிரிழக்கவில்லை என்கிறார் பொலிஸ்...

2025-04-22 23:28:46
news-image

தபால் மூல வாக்களிப்பின் போது அரச...

2025-04-22 20:33:09
news-image

பொருளாதார முகாமைத்துவத்துக்கு அமைச்சரவையால் விசேட குழு...

2025-04-22 17:33:04
news-image

டொன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் காயம்!

2025-04-22 21:53:35
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும்...

2025-04-22 17:23:42
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் ஊழல், மோசடிகளுக்கு ஒருபோதும்...

2025-04-22 17:27:08
news-image

மாத்தறை சிறையில் குழப்பம் : அதிகாரிகள்...

2025-04-22 21:21:49
news-image

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2025-04-22 21:37:42
news-image

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-04-22 20:39:13
news-image

யாழ் . மாநகர சபையில் யாருக்கு...

2025-04-22 17:17:05
news-image

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட மகனை பார்க்கசென்ற தமிழ்...

2025-04-22 20:04:55
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான பேராயரின்...

2025-04-22 17:25:48