ஈரான் தனது அணுவாயுத திட்டத்தை முற்றாக கைவிடவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் எதிர்பார்ப்பதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்வோல்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
உலகம் பார்க்கக்கூடிய விதத்தில் ஈரான் தனது திட்டத்தை கைவிடவேண்டும் என தெரிவித்துள்ள அவர் அணுவாயுதங்களை உருவாக்கவேண்டும் என்ற விருப்பத்திலிருந்து ஈரான் விலகுவதற்கான தருணம் இது,அவர்கள் அணு ஆயுத திட்டங்களை தொடர்வதற்கு அனுமதிக்கமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய எந்த தாக்குதலிற்கும் ஈரானே காரணம் என கருதப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையிலேயே வெள்ளைமாளிகையின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஈரானின் அணுவாயுத திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள வோல்ட்ஸ் டிரம்பின் கருத்துக்களை எதிரொலித்துள்ளதுடன் ஈரான் கைவிடவேண்டும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுவாயுத திட்டத்தினை அமெரிக்கா முற்றா செயல் இழக்க செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் தனது இரகசிய ஆதரவு குழுக்கள் மூலம் ஏற்படுத்துகின்ற உயிரிழப்புகளையும் அழிவுகளையும் நாங்கள் பார்த்திருக்கின்றோம் என தெரிவித்துள்ள அவர் ஈரானிடம் அணுவாயுதங்கள் இருந்தால், மத்திய கிழக்கு முழுவதும் அணுவாயுத மோதலில் சிக்குப்படும்,இது எங்களின் தேசிய பாதுகாப்பினை பொறுத்தவரை முற்றாக ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM