டிரம்பின் முன்னாள் மருமகளுடன் உறவு - பகிரங்கப்படுத்தினார் டைகர் வூட்ஸ்

24 Mar, 2025 | 11:31 AM
image

பிரபல கோல்ஃப் வீரர் டைகர் வூட்ஸ்; தான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்டிரம்பின் முன்னாள்மருமகள் வனேசா டிரம்புடன் உறவில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகபதிவில் டைகர் வூட்ஸ்இதனை பதிவிட்டுள்ளார்.

"காதல் காற்றில் தவழ்கின்றது,நீங்கள் என் பக்கத்தில் இருந்தால் வாழ்க்கை சிறப்பாகயிருக்கும்,நாங்கள் இணைந்து பயணிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம் என டைகர் வூட்ஸ் தெரிவித்துள்ளார்.

வனேசா டொனால்ட் டிரம்ப் ஜூனியரை திருமணம் செய்து 2005 முதல் 2018 வரை அவருடன் வாழ்ந்தார்,அவர்களிற்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர். வனேசாவின் 17 வயது ஹை  2026 ம் ஆண்டு முதல் மியாமி பல்கலைகழகத்தில்  கோல்ப் விளையாடவுள்ளார்,டைகர் வூட்ஸின் பிள்ளைகளும் அங்கேயே கல்விகற்கின்றனர். டைகர் வூட்ஸினதும் வனேசா டிரம்பினதும் பிள்ளைகள் இந்த வாரம் இடம்பெற்ற கோல்வ் போட்டியில் பங்குபெற்றியிருந்தனர்.

வூட்ஸ் வனேசா உறவு குறித்து கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்க  ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தனது தனிப்பட்ட வாழ்க்கையை மிகவும் இரகசியமாக வைத்திருந்த வூட்ஸ் ஏன் இந்த விடயத்தை பகிரங்கப்படுத்தினார் என்பத தெரியவில்லை.

வூட்ஸ் டிரம்புடன் பல தடவை கோல்வ் விளையாடியிருந்தார். டிரம்ப் வூட்சிற்கு 2018 இல் ஜனாதிபதி விருதினை வழங்கி கௌரவித்திருந்தார்ஃ

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியைக் கொன்ற சிங்கம்

2025-04-21 13:04:51
news-image

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்...

2025-04-21 12:12:11
news-image

மீண்டும் அதே தவறை செய்தார் அமெரிக்க...

2025-04-21 11:54:12
news-image

சீனா ரஸ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதாக உக்ரைன்...

2025-04-20 13:15:31
news-image

ஈக்குவடோரில் சேவல் பந்தயத்தில் பார்வையாளர்கள் மீது...

2025-04-20 12:46:18
news-image

மன்னர்கள் தேவையில்லை 'அமெரிக்காவில் டிரம்பின் நடவடிக்கைகளிற்கு...

2025-04-20 09:58:13
news-image

அவுஸ்திரேலியாவில் சக்தி வாய்ந்த கடலலைகள் தாக்கி ...

2025-04-20 10:13:22
news-image

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ; வட இந்தியா,...

2025-04-19 14:11:35
news-image

இந்தியாவில் இடிந்து விழுந்த மாடிக் கட்டிடம்...

2025-04-19 11:09:47
news-image

ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா...

2025-04-19 10:01:20
news-image

ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்த...

2025-04-18 16:52:31
news-image

உங்கள் தேசத்தின் சிறுபான்மையினர் நலனை பேணவும்’...

2025-04-18 15:24:04