கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு - மற்றுமொரு சந்தேகநபர் கைது!

24 Mar, 2025 | 11:34 AM
image

கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவலகம் வீதி பகுதியில் கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (23)  கைது செய்யப்பட்டுள்ளார்.

கிராண்ட்பாஸ் - நாவலகம் வீதி பகுதிக்கு  கடந்த 17 ஆம் திகதி இரவு 09.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் மோட்டார் சைக்கிள்களின் உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றில் இருந்த இரண்டு நபர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைகாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்டப்டனர். 

இது தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இருவரின் தொலைபேசிகளை பயன்படுத்தி துப்பாக்கிதாரிகளை சம்பவ இடத்திற்கு வரவழைத்ததாக கூறப்படும் சந்தேக நபர் இரண்டு தொலைபேசிகளுடன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட  சந்தேக நபர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இதுவரை மூன்று சந்தேக நபர்களும் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெல்லம்பிட்டியில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-04-21 12:40:16
news-image

கொத்தட்டுவ பகுதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது...

2025-04-21 13:01:10
news-image

கஞ்சா செடிகளுடன் வைத்தியசாலை விடுதியின் உரிமையாளர்...

2025-04-21 13:12:03
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; வேட்புமனுக்கள்...

2025-04-21 13:02:16
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் தாயும்...

2025-04-21 12:19:26
news-image

மின்னல் தாக்கி நான்கு பிள்ளைகளின் தாய்...

2025-04-21 11:53:04
news-image

யாழ். மரியன்னை பேராலயத்தில் உயிர்த்த ஞாயிறு...

2025-04-21 12:27:15
news-image

ஹொரவ்பொத்தானையில் வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-04-21 11:27:32
news-image

பண்டாரவளை- பூனாகலை பிரதான வீதியில் மண்சரிவு!

2025-04-21 12:28:06
news-image

சட்டவிரோத மீன்பிடியை கட்டுப்படுத்த கோரி முல்லைத்தீவு...

2025-04-21 12:27:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு உச்சபட்ச...

2025-04-21 12:04:08
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைக்கு...

2025-04-21 12:03:11