(ஆர்.யசி )

நாடளாவிய ரீதியில் பரவிவரும் டெங்கு நோய் பரவல் காரணமாக இதுவரையில்  177 பேர் உயிரிழந்துள்ளதுடன்  63ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். டெங்கு நோயை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரதுறை மற்றும் இராணுவம் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதே நிலையில் உயர்தரத்திலான புகைவிசிறல் இயந்திரங்களை ஜேர்மனியில் இருந்து பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் பல்வேறு நோய்கள் பரவிவரும் நிலையில் டெங்கு நோயின் பரவல் அதிகரித்து வருகின்றது. நாடாளாவிய ரீதியில் பரவிவரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரையில்  177 பேர் உயிரிழந்துள்ளதுடன்  63 ஆயிரத்து 987 பேர் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளனர். அதேபோல் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் கொழும்பு முதலாவதாக இனங்காணப்பட்டுள்ளது. கொழும்பில் மாத்திரம் இதுவரையில் 14 ஆயிரத்து, 187 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

மேலும் டெங்கு நோயை  ஒழிக்க  சுகாதார சேவையாட்களுடன் இணைந்து இராணுவத்தினரின் உதவி பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும்  டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றமையினால், குப்பைகளை அகற்றும் நடவடிக்கைக்கு  இராணுவத்தினரின் உதவி பெறப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் இலங்கையின் செயற்பாடுகளுக்கு அப்பால்  உயர்தரத்திலான புகைவிசிறல் இயந்திரங்களை ஜேர்மனியில் இருந்து பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.