பமுனுகம - உஸ்வெடகெய்யாவ பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சட்டவிரோத போதைப்பொருட்களைப் பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் சமூக ஊடகம் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து ஐஸ், கேரளா கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்தோடு, இந்த களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட 07 பெண்கள் மற்றும் 34 ஆண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐஸ் மற்றும் கேரள கஞ்சா வைத்திருந்ததற்காக 16 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
விருந்து நடைபெற்ற ஹோட்டலின் உரிமையாளரும் 03 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட கொழும்பு புறநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM