இன்றைய வானிலை

24 Mar, 2025 | 06:37 AM
image

மத்திய ,சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் குருநாகல்,காலி மற்றும் மாத்தறை  மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். 

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், 

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊவா மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

மத்திய ,சப்ரகமுவ மற்றும் ‌மேல்  மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் குருநாகல், காலி மற்றும் மாத்தறை  மாவட்டங்களிலும் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

திருகோணமலை தொடக்கம் மட்டக்களப்பு, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் சில  இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய  கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும்.

கடல்  பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு  20 - 35 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில்  இருந்து அல்லது கிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.  

காலி தொடக்கம் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான அத்துடன் புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜஹ்ரான் ஹாசிமிற்கும் இராணுவபுலனாய்வுபிரிவிற்கும் இடையிலான தொடர்புகள்...

2025-04-21 13:57:24
news-image

சாரதியை கத்தி முனையில் மிரட்டி காரை...

2025-04-21 13:49:18
news-image

வெல்லம்பிட்டியில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-04-21 12:40:16
news-image

கொத்தட்டுவ பகுதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது...

2025-04-21 13:01:10
news-image

கஞ்சா செடிகளுடன் வைத்தியசாலை விடுதியின் உரிமையாளர்...

2025-04-21 13:12:03
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; வேட்புமனுக்கள்...

2025-04-21 13:02:16
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் தாயும்...

2025-04-21 12:19:26
news-image

மின்னல் தாக்கி நான்கு பிள்ளைகளின் தாய்...

2025-04-21 11:53:04
news-image

யாழ். மரியன்னை பேராலயத்தில் உயிர்த்த ஞாயிறு...

2025-04-21 12:27:15
news-image

ஹொரவ்பொத்தானையில் வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-04-21 11:27:32
news-image

பண்டாரவளை- பூனாகலை பிரதான வீதியில் மண்சரிவு!

2025-04-21 12:28:06
news-image

சட்டவிரோத மீன்பிடியை கட்டுப்படுத்த கோரி முல்லைத்தீவு...

2025-04-21 12:27:41