தேர்தலுக்கு முன்னர் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்த அரசாங்கம், பொய்யான வாக்குறுதியை வழங்கி தமது வாக்குகளுக்காக மாத்திரம் அவர்களை உபயோகித்துக் கொண்டு தற்போது வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியாது என தெரிவிப்பதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மதுசான் சந்திரஜித் கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி வீதிக்கு இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் தற்போது சுமார் 35 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகள் உருவாகியுள்ளனர். கடந்த கால அரசாங்கங்களிடம் அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு தொடர்பில் முறையான கொள்கை ரீதியிலான திட்டமிடல்கள் இருக்கவில்லை. ஆகையால் இத்தகைய இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது. அத்தோடு ஆசிரியர் சங்கம் நாடளாவிய ரீதியில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் அதற்கான தீர்வினை வழங்குமாறும் தெரிவித்து வருகின்றனர்.
சுமார் 35 ஆயிரம் ஆசிரியர்களுக்கான வெற்றிடம் நிலவி வருகிறது. இவ்வாறானதொரு நிலையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட வேண்டிய வேலையற்ற பட்டதாரிகள் வீதியில் உள்ளனர். வைத்தியசாலைகளிலும் நோயாளர்கள் மருந்து மற்றும் ஏனைய சேவைகளை பெற நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. சுகாதார சேவையிலும் பல துறைகளில் ஊழியர்களுக்கான பற்றாக்குறை உள்ளது. அவ்வாறான சேவைகளுக்கு வேலையற்ற பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யலாம். எனினும் இந்த அரசாங்கம் இவைத் தொடர்பில் கருத்திற் கொண்டதாக தெரியவில்லை.
தேசிய மக்கள் சக்தியின் வளமான நாட்டு அழகான வாழ்க்கை என்ற தேசிய வேலைத்திட்டத்திலும் துரிதமாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிரியர் சேவை, தகவல் தொழிநுட்ப சேவை, அரச சுங்க பிரிவு, வெளிநாட்டு மற்றும் சுற்றுலா சேவை உள்ளிட்ட அரச சேவைகளுக்காக 30 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதாக தேர்தலுக்கு முன்னர் அரசாங்கம் உறுதியளித்திருந்தது.
எனினும் இந்த அரசாங்கம் தமது வாக்குகளுக்காக மாத்திரமே அவர்களை உபயோகித்துக் கொண்டுள்ளது. பொய்யான வாக்குறுதிகளை அளித்து தற்போது வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியாதென தெரிவிக்கின்றனர். எவ்வாறெனினும் அரங்கம் அளித்த வாக்குறுதியை கருத்தில் கொண்டு வேலையற்ற பட்டதாரிகளுக்கு உடனடியாக வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM